Share via:

சட்டமன்றத்தில் இருந்து இன்று வெளிநடப்பு செய்திருக்கும் எதிர்க்கட்சித்
தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’என்ன கிழிச்சார் ஸ்டாலின்?’ என்று கடுமையாக அட்டாக் செய்திருப்பது
தி.மு.க.வினரை உசுப்பேற்றியுள்ளது.
கேள்வி நேரத்தின் போது சபாநாயகர் அப்பாவு மரபு மீறி நடந்துகொண்டார்,
பேசுவதற்கு அனுமதிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க.வினர்
வெளிநடப்பு செய்தார்கள். அப்போது ஸ்டாலின், ‘தைரியமானவர்கள் என்றால் என் பதிலைக் கேட்டுவிட்டு அ.தி.மு.க.வினர்
வெளியே போக வேண்டும்’ என்றார். ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல் வெளிநடப்பு செய்தார்கள்.
ஆகவேஇதை, தி.மு.க.வினருக்குப் பயந்துபோய் வெளிநடப்பு செய்கிறார் என்று கிண்டல் செய்தார்கள்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘திமுகவுக்குப் பயந்து
வெளிநடப்பு செய்தீர்களா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ‘’என்ன கிழிச்சிட்டாரு
ஸ்டாலின்..? வெட்கக்கேடா இருக்குதுங்க. தினம் ஒரு கொலை நடக்குது. கேட்டா தனிப்பட்ட
முறையில் சொந்தப் பிரச்னையில கொலை நடக்குதுன்னு சொல்றார். குற்றவாளியை கைது செய்வோம்னு
சொல்கிறார். எல்லோரும் தான் கைது செய்கிறார்கள். இதை தடுப்பதற்கு என்ன செய்திருக்கிறார்..?
இந்த கேள்விக்கு அவர் பதில் சொன்னாரா..?
எனவே, அரசாங்கத்துக்குப் பயந்து நாங்கள் வெளியே வரவில்லை. இந்த
அரசுக்குப் பயப்படும் கட்சி அ.தி.மு.க. அல்ல என்பதை பல முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.
எங்களை பேச அனுமதிக்கவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தே வந்திருக்கிறோம்’’ என்கிறார்
எடப்பாடி பழனிசாமி.அப்போது ஸ்டாலின், ‘தைரியமானவர்கள் என்றால் என் பதிலைக் கேட்டுவிட்டு அ.தி.மு.க.வினர்
வெளியே போக வேண்டும்’ என்றார். ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல் வெளிநடப்பு செய்தார்கள்.
ஆகவே