News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சமீபத்தில் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நியாயம் கேட்பதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மீனவர்களை அழைத்துக்கொண்டு டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஜூன் 16ம் தேதி தான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பாண்டில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த மீனவர்களில் 13 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியிலிருந்து வங்கக்கடலுக்கு நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 32 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் 4 நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 50 நாட்களில் மட்டும் தமிழக மீனவர்கள் 109 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களில் 52 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 57 பேரும் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களில் படகு ஓட்டுனர்கள் மூவருக்கு தலா ரூ.40 லட்சம் வீதம் இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்திருக்கிறது; உடனடியாக அபராதம் செலுத்தாவிட்டால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது. ஏற்கனவே இரண்டாவது முறையாகவும், மூன்றாவது முறையாகவும்  கைது செய்யப்பட்ட 12  மீனவர்களுக்கு   6 மாதம் முதல்  ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய பாஜக அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பதும், மாநில விடியா திமுக அரசு போதிய அழுத்தம் கொடுக்காமல் இருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்தம் உடைமைகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுவதோடு நில்லாமல், தமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள் தான் என்பதை மனதிற்கொண்டு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் நிரந்தர தீர்வை எட்டுமாறு மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறேன்…’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மீனவர்கள் பிரச்னையில் நாடகம் போடும் பா.ஜ.க.வினரையும் அண்ணாமலையையும் தான் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருக்கிறார் என்று அ.தி.மு.க.வினர் தெரிவிக்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link