News

மோடி ஆதரவாளர்களுக்கு தரமான பரிசுகள். இந்தியாவுக்கு நல்ல காலமா..?

Follow Us

த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்கவிழாவில் நடிகர் விஜய் மொத்தமே ஐந்து நிமிடங்களில் சுருக்கமாகப் பேசி முடித்தது ரசிகர்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. அதோடு, கூட்டணி பற்றி அல்லது தனித்து நிற்பது குறித்தும் விஜய் எதுவுமே பேசவில்லை என்பதும் குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது.

இறுதியாகப் பேசிய விஜய், ‘’பிரசாந்த் கிஷோர் வருகைக்கு நன்றி தெரிவித்து பேச்சைத் தொடங்கிய விஜய் கட்சியில் இளைஞர்களும், வசதி இல்லாதவர்களுக்கும் பதவிகள் கொடுக்கப்பட்டிருப்பதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். அப்படி இருந்தால் என்ன தப்பு?’’ என்று கேள்வி கேட்டார். அதோடு, ’’மும்மொழிக் கொள்கையை நிறைவேற்றவில்லை என்றால் நிதியை தர மாட்டாங்களாம். நிதி கொடுப்பது கடமை, வாங்குவது உரிமை. பாசிசமும் பாயாசமும், அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் பேசி வைத்துக்கொண்டு வேண்டுமென்றே ஹேஸ்டேக் சண்டை போடுகிறார்கள். வாட் புரோ, இதெல்லாம் வெரி ராங் புரோ என்று நேரடியாக ஸ்டாலினை அட்டாக் செய்தார்.

இரண்டு கட்சிகளும் சொல்லி வைத்துக்கொண்டு நாடகம் போடுகிறார்கள். ஆனால், மக்களுக்கு உண்மை தெரியும். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரி இல்லை. எல்லா மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் எந்த மொழியை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரு மாநிலத்தின் கல்விக்கொள்கையை கேள்விக் குறியாக்கி, வலுக்கட்டாயமாகத் திணித்தால் விட மாட்டோம். மும்மொழிக் கொள்கையை உறுதியாக எதிர்ப்போம்.’’ என்றார்.

அதோடு, ‘’அரசியல் பண்ணையார்களை அரசியலை விட்டே விரட்ட வேண்டும். 1967ல் அண்ணா 1977ல் எம்.ஜி.ஆர். போன்று வரலாறு மீண்டும் திரும்பும். பூத் கமிட்டி மாநாடு நடத்தும்போது தெரியும், தமிழக வெற்றிக் கழகம் பவர்ஃபுல்லா இருக்கும்ணு தெரியவரும்…’’ என்பதோடு முடித்துக்கொண்டார்.

தனித்து நிப்பேன்னு சொல்லியிருக்க வேண்டாமா புரோ..? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link