Share via:

சவுக்கு சங்கர் வீட்டில் நுழைந்து தாக்குதலுக்கு தலைமை தாங்கிய
வாணிஸ்ரீ விஜயகுமார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்.
இங்கு தாக்குதல் நடந்த நேரத்தில் முதல்வரை சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கு சம்பளத்தை
நிதியாக அளித்திருக்கிறார் செல்வப்பெருந்தகை. அதாவது, சவுக்கு சங்கர் வீட்டு தாக்குதல்
குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுவது அரசியல் களேபரமாகியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் சவுக்கு சங்கருக்கும்
நீண்ட காலமாகவே நேரடி மோதல் நடந்துவருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையைக்
கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து நிறைய வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். செல்வப்பெருந்தகையின்
பதவியைப் பறித்து, சசிகாந்த் செந்திலுக்குக் கொடுப்பதற்காகவே சவுக்கு சங்கர் ஸ்கெட்ச்
போடுவதாகவும் அதற்காகவே திட்டமிட்டு தொடர் தாக்குதல் நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
திமுக கட்சிக்கு விசுவாசமாக அடியாளாக செல்வப்பெருந்தகை செயல்பட்டதால்
திமுகவின் சிபாரிசில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு கிடைத்தது.
கடந்த மாதம் செல்வப்பெருந்தகைக்கு எதிராக பெரும்பான்மையயான தமிழக காங்கிரஸ் மாவட்ட
தலைவர்கள் டெல்லி சென்று அவரை மாற்ற வேண்டி தலைமையை சந்திக்க முயன்றனர். ஆனால் டெல்லி
தலைமை கண்டுகொள்ளவில்லை.
செல்வப்பெருந்தகைக்கு நெருங்கிய கட்சி நிர்வாகி அஸ்வத்தாமன் ஆம்ஸ்ட்ராங்
கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இந்த விஷயத்தில் செல்வப்பெருந்தகையை
கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து சவுக்கு சங்கர் வலியுறுத்தி வந்தார்.
அதோடு மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் பெயரில் ஊழல் செய்வதாகவும் கூறினார்.
இதனை சாக்காக வைத்து சவுக்கு சங்கர் வீட்டில் திட்டமிட்டு தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது. வீடு முழுக்க சாக்கடை, மலம் ஊற்றப்பட்டுள்ளது. இதெல்லாம் ஃபேஸ்புக்கில்
லைவ் வீடியோவாக ஒளிபரப்பு செய்தார்கள் என்பதுதான் ஆச்சர்யமான விவகாரம். இந்த ஆட்சியும், காவல் துறையும் கொடுத்திருக்கும்
தைரியத்தாலே இந்த விஷயம் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் தலைமை இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறது
என்று பார்க்கலாம்.