News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

திருச்சி மாவட்ட எஸ்பியான வருண்குமார்  மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டேவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்துகள் பதிவிடப்பட்டது தொடர்பாக  சீமான் உட்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எக்ஸ் வலைதளத்தில் இருந்து விலகுவதாக எஸ்.பி.வருண்குமார் அறிவித்திருப்பது புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

வருண்குமார் ஐபிஎஸ்  விடுத்துள்ள அறிக்கையில், ‘’பொய் செய்தி பரப்பிய யு டியூபர் மீது  சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.  சட்ட அடிப்படையில் நான் பணியாற்றியதற்காக, அந்த  யுடியுபர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், என்னைக் கடுமையாக சில சாதி பெயர்களைக் குறிப்பிட்டு சாடினார்.  அதற்கு என் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பிய ஒரே காரணத்திற்காக  என் குடும்பத்தினர்கள், பெண்கள், குழந்தைகள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் எக்ஸ் தளத்தில் பரப்பினர்.

என் குழந்தைகள் மற்றும் என் குடும்ப பெண்களின் புகைப்படங்களும் தரம் தாழ்ந்து ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டது மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அச்சுறுத்தலாக உருமாறியது. இவற்றில் ஈடுபட்ட ஒருசில எக்ஸ் கணக்குகளைக்  குறிப்பிட்டுள்ளேன்.

இந்த கணக்குகளை ஆராயும்போது,  இவை எல்லாமே  கட்சியின் ஒருங்கிணைப்பாளரில் தொடங்கி மாநில பொறுப்பாளர்கள் வரை முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலால் இயக்கப்படுகிறதா சந்தேகம் எழுகிறது. வெளிநாடுகளில் வாழும் தமிழ் தெரிந்த நபர்களுக்கு பணம் கொடுத்து ஆபாச பதிவுகளை பதிவிட உத்தரவிட்டதாக தெரியவருகிறது. 

பொது வாழ்வில் இருக்கும் எங்களுக்கு இதுபோன்ற தொடர் ஆபாச தாக்குதல்கள் ஒரு பொருட்டே அல்ல. என்னதான் காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்தாலும் நாங்களும் சராசரி மனிதர்கள்தான். ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும் எனது மனைவியும் விலக முடிவு செய்துள்ளோம்.  இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ மேற்கொள்ளவில்லை. போலிக் கணக்குகள் மூலம் பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும்  குழந்தைகளுக்குக் கொலை மிரட்டல் விடும் வக்கிர புத்தியும் கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்கு அவமானப்பட வேண்டும்’’ என்று அறிவித்திருக்கிறார். 

ஒரு மாவட்ட கண்காணிப்பாளரையே இந்தளவிற்குத் தாக்குகிறார்கள் என்றால் சாதாரண மக்களையும், பெண்களையும் என்ன செய்வார்கள்? எஸ்.பி.யின் பட்டியலில் இருக்கும் ஆபாசம் பரப்பும் விஷமிகளையும் அவர்களை கூலிக்காக தூண்டிவிடும் அந்த கட்சி பொறுப்பாளர்களையும் கைது செய்ய வேண்டும் என்று சைபர் கிரைமில் பொதுநல ஆர்வலர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து ஒளிந்திருக்கும் ஒட்டுமொத்த ஆபாச ஐ.டி. விங் ஆட்களும் கைது செய்யப்பட இருப்பதாகத் தெரிகிறது.

இப்போது வருண்குமார் எஸ்.பி. யாருக்கும் பயந்து வெளியேறவில்லை, பதுங்கியிருக்கிறார் என்றே சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link