Share via:
’’எங்க ஏரியாவுக்குள்ள
வந்து பேசுவதற்கு உனக்கு என்ன துணிச்சல், சும்மா விட மாட்டேன்’’ என்று மகாவிஷ்ணுவின்
சர்ச்சைப் பேச்சுக்கு எதிராக அமைச்சர் அன்பில் மகேஸ் கொந்தளித்தார். இதையடுத்து மகாவிஷ்ணுக்கு
எதிராக தி.மு.க.வினர் தொடர்ந்து கடுமையாக எதிர்வினை ஆற்றினார்கள். அன்பில் மகேஸ் ரிசைன்
செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.
இதையடுத்து தமிழகம்
முழுவதும் மகாவிஷ்ணு விவகாரம் மிகப்பெரிய பேசப்பட்டு பரபரப்பானது. இத்தனை பெரிதாக அந்த
விவகாரம் பேசப்பட்டதற்கும் தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததற்குப்
பின்னணியில் ஒரு பாலியல் கொடூரம் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
’’திருச்சி அருகே
சிறுமருதூர் கிராமத்தை சார்ந்த 18 வயது பெண்ணை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களுக்கு
டிரைவராக பணி செய்வதாக கூறியுள்ள சிலம்பரசன் என்ற ஒருவனும் அவனுடன் 4 நபர்களும் சேர்ந்து
கற்பழித்து அதை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளதாக புகார் கொடுக்கப்படுகிறது. அதே தினம்
மகாவிஷ்ணு விவகாரத்தை திமுக தரப்பு பெரிய விசயமாக பேசி மீடியாவை பேச வைத்து விவாதம்
செய்கிறார்கள்..’’ என்று மாரிதாஸ் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
இதையடுத்து பா.ஜ.க.வினர்,
‘’திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் டிரைவர் செய்த கூட்டு பாலியல் வன்முறையை மறைக்கவே
மஹாவிஷ்ணு கைது. திருச்சி மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் நாம் தமிழர்
கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதில் பிசியாக இருப்பதால்
இப்போதைக்கு பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரம் இல்லை போல. திருச்சி மாவட்டத்தில்
மட்டும் கடந்த சில தினங்களில் நான்கு பாலியல் வழக்குகள், இது காவல்துறையின் தோல்வி
இல்லையா ? யார்தான் இதற்கு பொறுப்பேற்பது ?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
இப்படியொரு சம்பவம்
நடந்ததா..? திட்டமிட்டு மகாவிஷ்ணு விவகாரம் ஊதப்பட்டதா என்பதை அன்பில் மகேஸ் தெரிவிக்க
வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.