Share via:
ஜனநாயகன் படம் வெளியானது குறித்து விஜய் கடுமையான கண்டனம் தெரிவிப்பார்
என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் அந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால்,
ரஜினி, கமல் தொடங்கி சூரி வரை கண்டனம் தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில் இந்த படத்தை வெளியிட்டது விஜய்தான் என்று குற்றம்
சாட்டுகிறார்கள். இதுகுறித்துப் பேசுபவர்கள், ‘’ஜனநாயகனின் காட்சிகளாக வருபவை எடிட்டிங்
அறையில் இருந்து லீக் ஆனதாக சந்தேக்கப்பட வைக்கிறது. கே.வி.என். என்ற தயாரிப்பு நிறுவனத்திடம்
இந்த படத்தை எடுக்கும் அளவிற்கு பணம் இல்லை. ஆனால் அவர்கள் 300 கோடி பட்ஜெட்டில் படத்தை
தயாரித்ததாக கூறுகிறார்கள் என்றால் அதில் எதோ ஒரு உள்குத்து இருக்கிறது. இதன் உண்மையான
தயாரிப்பாளரும், அதன் மூலம் அரசியல் லாபம் தேடுபவரும் ஒருவரே என்ற விதத்தில் இந்த படத்தை
தயாரித்தது விஜய் தான்.
இந்த படத்தை இதுவரை வெளிவராத அளவிற்கு சட்டசிக்கல்கள் உருவாகியுள்ள
நிலையில் படம் தயாரிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் இந்தப்படம் தேர்தலுக்கு
முன்னர் வர வேண்டும். ஆக அது லீக் செய்யப்பட்டுள்ளது. ஆக லீக் செய்ததது விஜய் டீம்
தான்.
படத்தின் தயாரிப்பு செலவு 300 கோடிகள் என்பது உண்மை, ஆனால் அதில்
250 கோடிகள் விஜயின் சம்பளம் என்பதால், நடிப்பிற்கான செலவை தானே ஏற்பதால் நிகர நஷ்டம்
வெறும் 50 கோடிகள் தான், ஆனால் அதில் கிடைக்கும் அரசியல் லாபம் பெரிதானது.
50 கோடிகளை 234 தொகுதிகளுக்கு என செலவு செய்தால் வெறும் 21 லட்சங்கள்
தான். இப்போது புரிகிறதா விஜய் தந்திரம். அந்த 50 கோடிகள் படம் வெளியே வரும் அன்று
சென்று பார்க்கும் விஜய் ரசிகர்கள் மூலம் தாராளமாக வந்து விடும் என்பது அடுத்த உண்மை.இது
தவிர்த்து சாட்டிலைட் உரிமைகள், டிஜிட்டல் உரிமைகள் விற்பனை என பலவிதத்தில் வரும் வருமானத்தால்
விஜய்க்கு எந்த விதத்திலும் நஷ்டம் இல்லை. ஆக இது முழுக்க, முழுக்க விஜய் கும்பலால்
வெளியே விடப்பட்டது என்பது தான் உண்மை. தைரியம் இருந்தால் இந்த லீக் விஷயத்திற்கு விஜய்
டீம் சிபிஐ விசாரணை கேட்கட்டும், பார்க்கலாம்’’ என்கிறார்கள்.
இதற்கு சிபிஐ விசாரணை கேட்பாரா விஜய்?