Share via:
திராவிடக் கொள்கைப்படி தன்மானத்துடன் ஆட்சி நடத்துவோம் என்று வாய் கிழிய வசனம் பேசும் ஸ்டாலின், பழி வாங்கும் நோக்கத்துடன் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்ததற்கு உச்ச நீதிமன்றத்தில் குட்டு மேல் குட்டு வாங்கி அவமானப்பட்டதுதான் மிச்சமாகியிருக்கிறது.
தி.மு.க. அரசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை சமூகவலைதளங்களில் பேசி வந்தார். ஒரு எதிர்க்கட்சி செய்யவேண்டிய பணியை தனி மனிதனாக சவுக்கு சங்கர் செய்தார். இதற்குப் பழிவாங்குவதற்கு எந்த அளவுக்கும் ஸ்டாலின் செல்வார் என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் அளவுக்கு தன் சர்வாடிகாரத்தைக் காட்டி அம்பலப்பட்டு நிற்கிறார்.
பெண் காவலர்களை பேசினது தவறு என்றால் அதற்கு வழக்கு போட்டு நடவடிக்கை எடுத்து இருக்கலாம், ஆனால் அந்த ஒரு வழக்கை வைத்து தொடர்ந்து 17 வழக்குகள் போட்டு ஒரு குண்டாஸ் உச்ச நீதிமன்றத்தில் ரத்து ஆன அடுத்த நாளே மீண்டும் குண்டாஸ் போட்டார்கள். சிறையில் வைத்து சவுக்கு சங்கர் கையை உடைத்தார்கள். அது மட்டுமின்றி சவுக்குக்கு ஆதரவாக இருந்த ஃபெலிக்ஸ் போன்ற சிலரையும் கைது செய்து டார்ச்சர் செய்தார்கள்.
ஆனால், ஸ்டாலினால் என்ன செய்ய முடிந்தது..? உச்ச நீதிமன்றம் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக முடிவு கட்டிவிட்டது. நீங்கள் குண்டர் சட்டத்தை வாபஸ் வாங்கியிருக்காவிட்டால், என்ன நடந்திருக்கும் தெரியுமா என்று எச்சரிக்கை செய்யும் அளவுக்குப் போயிருக்கிறது.
இதோ, மீண்டும் சவுக்கு சங்கர் பேசத் தொடங்கிவிட்டார். மீண்டும் முடக்கும் தைரியம் இருக்கிறதா ஸ்டாலினுக்கு..?