Share via:
நள்ளிரவில் சாத்தனூர் அணையிலிருந்து முன்னறிவிப்பின்றி 1.68 லட்சம்
கன அடி நீரை திறந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களை
பெருவெள்ளத்தில் முழ்கடித்துவிட்டது என்று திமுக அரசு மீது குற்றம் சுமத்தப்படுகிறது.
ஆனால், சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து முறையாக அறிவிப்பு
கொடுக்கப்பட்டது என்று தி.மு.க.வினர் கூறிவருகிறார்கள். இதற்கு பதிலடியாக உண்மையை அம்பலப்படுத்தி
ஸ்டாலினை அடித்துத் துவைக்கிறார்கள்.
இது குறித்துப் பேசும் அ.தி.மு.க.வினர், ‘’சாத்தனூர் அணையில் இருந்து
10,000 கன அடி, 30,000 கன அடி விடுவிக்கப்படும் என்றும், திடீரென நள்ளிரவில் தாசில்தாருக்கு
மட்டும் ஒரு கடிதம் எழுதுவதாக நாடகமாடிவிட்டு 1.68 லட்சம் கன அடி நீரை திறந்து விட்டிருக்கிறதா
திமுக அரசு? தாசில்தாருக்கு கொடுக்கப்பட்ட கடிதம் என்பது மக்களுக்கான முன்னறிவிப்பு
கிடையாது.
தாசில்தாரிடம் இருந்து மக்களுக்கு 1.68 லட்சம் கனஅடி வெளியீட்டுக்கான
தகவல் சென்றது என்பதற்கு என்ன ஆதாரம்? தண்டோரா போடப்பட்டதா? மக்கள் வெளியேற வேண்டும்
என்று ஆட்டோக்களில் அறிவிப்பு சொல்லப்பட்டதா? அறிவிப்பு பலகை எங்காவது வைக்கப்பட்டதா?
நள்ளிரவில் தங்களுக்கு தெரியாமல் சாத்தனூர் அணை திறந்துவிட்டதாக மக்கள் குற்றச்சாட்டு
வைக்கிறார்களே? இதற்கு யார் பொறுப்பு?
ஒரு நல்ல அரசு என்பது மழை அளவை முன்கூட்டியே கணித்து, படிப்படியாக
அணை நீரை வெளியேற்றி இருக்க வேண்டும். ஆனால், டிசம்பர் 1 காலை 15,000 கன அடி நீரை வெளியேற்றியவர்கள்,
இரவு 10 மணிக்கு அதனை 30,000 கன அடியாக அதிகரித்துள்ளனர். ஆனால், நள்ளிரவு 2.45 மணிக்கு
திடீரென 1,68,000 கன அடி நீரை வெளியேற்றியுள்ளது திமுக அரசு.
அதாவது, 14 மணி நேர இடைவெளியில், வினாடிக்கு 15,000 கன அடி நீர்
வெளியேற்றத்தை 30,000 கன அடியாக அதிகரித்தவர்கள், அடுத்த 5 மணி நேரத்தில், நள்ளிரவில்,
திடீரென 1,68,000 கன அடி நீரை வெளியேற்றியுள்ளனர். இதற்கான அரசின் நள்ளிரவு செய்திக்
குறிப்பில், “சாத்தனூர் அணையின் நீர் மட்டம் எதிர்பாராத வகையில் அதிகரித்ததாக”
குறிப்பிட்டுள்ளார்கள்.
நீர்வளத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறை என பல்வேறு
துறைகளை வைத்து கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசு நிர்வாகம் இதுபோன்று ‘எதிர்பாராத
வகையில்’ நடந்ததாகச் சொல்வது வெட்கக் கேடு. இது திமுக அரசின் கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு.
நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்களுக்கு, நீர்வளத் துறை
எச்சரிக்கை சென்றடையவில்லை. எச்சரிக்கை விடுக்கும் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாகவே,
அணையில் இருந்து 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 1.68 லட்சம் கனஅடி
தண்ணீர் திறந்து விடப்படும் என்பதை சற்றும் எதிர்பாராத 4 மாவட்ட கரையோரங்களில் வசிக்கும்
மக்கள் திணறினர். உயிரை பாதுகாத்து கொள்ள, வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள், தங்களது
உடமைகளை பாதுகாக்க முடியவில்லை.
வீடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை
வெள்ள நீரில் மூழ்கியது. கால்நடைகள் உயிரிழந்தன. கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து
செல்லப்பட்டன. ஆக மொத்தம், நள்ளிரவு 2.45 மணிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் திடீரென
வெளியேற்றிவிட்டு, அதனை அதிகாலை 4.15 மணிக்கு ஊடகங்களுக்கு செய்தியாக அனுப்பிவிட்டு
– திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களுக்கு ஐந்து முறை
எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக திமுக உபிஸ் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். வெட்கம்
கெட்ட திராவிடமாடல்’’ என்று கடும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
இதற்கு தி.மு.க.வினர், ‘’புயல்,பெரும் மழை மற்றும் தொடர் நீர்
வரத்தால் அணையில் கொள்ளவும் விரைவில் நிரம்புகிறது. அணையினை திறக்கவில்லை எனில் பெரும்
பேரழிவினை உண்டு செய்யும்!! இதெல்லாம் தெரியாது அறிவித்ததை விட அதிகமாக தண்ணீர் சாத்தனூர்
அணையில் இருந்து திறந்து விடப்பட்டதால்தான் விழுப்புரத்தில் வெள்ளம் என சிலர் வதந்தி
பரப்புவதை பேரிடர் காலத்தில் அரசியல் லாபம் பார்க்கும் வெறி மட்டுமே இருப்பதாக பார்க்க
முடிகிறது’’ என்கிறார்.
இதே காரணத்தை ஜெயலலிதா கூறிய போது மட்டும் கண்டனம் எழுப்பியவர்கள்,
இப்போது மட்டும் சமாளிக்கலாமா.?