News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அமலாக்கத்துறை மூலம் 14 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை செய்யப்பட்ட டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐ.ஏ.எஸ். ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் திமுகவினருக்கு பெரும் கலக்கமாக மாறியிருக்கிறது.

இன்று சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவல்படி டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் அவரது ஒப்புதல் வாக்குமூலத்தில் டாஸ்மாக்கில் ரத்தீஷ் உத்தரவுப்படியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டதாகக் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு ரத்தீஷை உதயநிதியின் பிரதிநிதியாகப் பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேலிடம் கூறிய தகவல்கள் படி விசாகன் ஐ.ஏ.எஸ். அவருக்குத் தெரிந்த உண்மைகள் அனைத்தையும் கூறிவிட்டதால் அவர் கைது செய்ய்பபடவில்லை என்று சொல்லப்படுகிறது. அடுத்து ரத்திஷுக்கு சம்மன் அனுப்புவதற்கு ஏற்பாடுகள் அமலாக்கத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்கிறார்கள். ஆகவே, இதையொட்டி யார் அந்த தம்பி என்ற ஹேஸ்டேக்கை அதிமுக டிரெண்டிங் செய்தது மட்டுமின்றி, போஸ்டர் ஒட்டியும் பரபரப்பூட்டி வருகிறது. யார் அந்த சார் போன்று யார் அந்த தம்பி என்ற போஸ்டரும் தமிழகத்தைக் கலக்குகின்றன.

இந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கரன் பற்றி பா.ஜ.க. தலைவர் ஒரு பரபரப்பு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘’டாஸ்மாக் முறைகேட்டில் தொடர்புடைய நபர்கள் பலர் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றனர். அவர்களுள் ஆகாஷ் பாஸ்கரன் எனும் சினிமா தயாரிப்பாளரும் ஒருவர். அவர் யார் என்று பார்த்தால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கோபாலபுரம் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர் என்பது உறுதியாகியுள்ளது.

அமலாக்கத்துறை ஆகாஷ் பாஸ்கரனை நெருங்குவது தெரிந்து தான் தமிழக டாஸ்மாக் முறைகேடு மற்றும் ஆயிரம் கோடிக்கு மேல் அதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அளித்த தகவல் குறித்த விஷயங்களை மக்களின் கவனத்தில் இருந்து திசை திருப்ப வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அரசு மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஹிந்தி எதிர்ப்பு, மும்மொழி எதிர்ப்பு என்கிற நாடகத்தை அரங்கேற்றி நாள்தோறும் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link