Share via:
ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த வினேஷ் போகத்
திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது.
காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையையும், அரையிறுதியில் கியூகா வீராங்கனையையும்
தோற்கடித்தார் வினேஷ் போகத். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய
முதல் இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் இருந்தார். இறுதி போட்டியில் தங்கம் வெல்வார்
என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த இறுதி
போட்டிற்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடைபிரிவில்
கலந்து கொண்ட வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக ஒலிம்பிக்கில் இருந்து
அவர் தகுதி செய்யப்பட்டுள்ளார்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது இந்திய ரசிகர்கள் மத்தியில்
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றாலும்
வினேஷ் போகத்திற்கு ஒலிம்பிக் பதக்கம் மட்டும் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.
2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதியில் தோல்வி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டில்
காலிறுதியில் தோல்வி என ஒலிம்பிக் களம் மட்டும் வசமாகாமலே இருந்தது.
இரண்டு ஒலிம்பிக்கில் தோல்வி கண்ட வினேஷ் போகத்திற்கு, பாரிஸ்
ஒலிம்பிக்கில், முதல் சுற்றே கடும் சவாலாக இருந்தது. தொடக்க சுற்றில் 4 முறை உலக சாம்பியனும்,
நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பான் வீராங்கனையை சுசாகியை வீழ்த்தி அசத்தினார்.
அரையிறுதியிலும் அசால்ட்டாக வெற்றி பெற்றார். தங்கம் உறுதி என்று அனைவரும் கருதிய நேரத்தில்
இப்படியொரு செய்தி இடியாக இறங்கியிருக்கிறது.
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். சபாஷ் வினேஷ் போகத்