Share via:
நூறு கிராம் எடை
வித்தியாசம் காரணமாக இறுதிப்போட்டியில் பங்கேற முடியாமல் போனதுடன், வெள்ளிப் பதக்கமும்
பறிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக
அறிவித்துள்ளார். அதேநேரம், அவரது சதிக்குக் காரணம் என்று அம்பானி
மருத்துவமனையின் டாக்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வினேஷ்
போகட், “மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய
உத்வேகம் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001
– 2024 மல்யுத்தத்துக்கு குட் பை” என்று பதிவு போட்டிருக்கிறார்.
ஒலிம்பிக்கில்
பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் வினேஷ்
போட்டியிட்டார். ஆனால் அவரது எடை
அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம்
அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தனது
எக்ஸ் தள பக்கத்தில்
“வினேஷ், தனது எடையைக் குறைக்க
இரவு முழுவதும் பல முயற்சிகள்
எடுத்தபோதிலும், காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில்
கூடுதல் எடையுடன் இருந்தார்.” எனத்
தெரிவித்தது.
இந்நிலையில்
விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS- The Court of Arbitration for
Sport) அவர் மேல்முறையீடு செய்தார். வினேஷ் போகத்தின்
இந்த மேல்முறையீடு மீது இன்ற) இடைக்கால
உத்தரவு வெளியாகவிருக்கிறது.
கெடுபிடியாக உள்ளது. இந்த நிலையில்
இந்த இடைக்கால உத்தரவு எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ளது.
இப்போது வினேஷ்
போகத்துக்கு எதிராக வேண்டுமென்றே சதி
செய்து, அவரை இறுதிப்போட்டியில் விளையாடாமல்
செய்துள்ளனர் என்று பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டு அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான
கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் பணிபுரியும்
நியூட்ரியனிஸ்ட் டாக்டர் டின்ஷா பார்டிவாலா
மீதும் வைக்கப்பட்டுள்ளது.
அவர் தான் வினேஷ் போகத்தின்
எடையை கவனிக்கும் நியூட்ரியனிஸ்டாக இருக்கிறார். அவர் யாரோ ஒரு
சிலர் அறிவுரையின்பேரில் வினேஷ் போகத் ஒலிம்பிக்
இறுதிப் போட்டியில் ஆடக்கூடாது என்பதற்காக இந்த சதியை நிகழ்த்தியுள்ளதாகவும்
விமர்சனம் எழுந்துள்ளது.
இப்படி நடக்க வாய்ப்பு
இருக்கிறது என்பதனாலே தன்னுடைய சொந்த நியூட்ரிஷ்யன், பிசியோதெரபிஸ்ட்களை அனுமதிக்க
வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.
வினேஷ் போகத்தின் நெருங்கிய உறவினரும், சிறு வயது பயிற்சியாளருமான
மஹாவீர் போகத், ‘’இவ்வளவு நெருங்கிவந்து பதக்கத்தை இழந்ததால் உண்டான
மனநிலை காரணமாக ஓய்வு முடிவை
அவர் எடுத்திருக்கலாம். யாராக இருந்தாலும், பதக்கம்
வெல்வதற்கு இவ்வளவு நெருக்கமாக வந்தபிறகு
இப்படியோரு நிலை வந்தால், கோபத்தால்
இப்படிப்பட்ட முடிவைத்தான் எடுப்பார்கள். அதேபோல் தான் வினேஷ்
போகத்தும் ஏமாற்றத்தால் ஓய்வு அறிவித்துள்ளார். ஆனால்,
அவர் ஓய்வு பெறக்கூடாது. வினேஷ்
தனது ஓய்வு முடிவை திரும்ப
பெறவேண்டும். அவரை நேரில் சந்தித்த
பிறகு, வினேஷை உட்காரவைத்து இந்த
முடிவை மாற்றிக் கொண்டு கடுமையாக
உழைக்கச் சொல்லி வலியுறுத்துவேன்’’ என்று
கூறியிருக்கிறார்.