Share via:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 7ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இது வார இறுதி நாள் என்பதாலும் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வருவதாலும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி பயணிகளின் விருப்பத்திற்கிணங்க சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையன்று (6ம் தேதி) பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக பயணித்து இரவு 8.28 மணியளவில் சேலம் சென்றடையும். அதன் பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணியளவில் புறப்பட்டு ஈரோடு, தஇருப்பூர் வழியாக இரவு 11.45 மணியளவில் கோவையை அடைகிறது.
அதன் பின்னர் மறுமார்க்கத்தில் இருந்து அதாவது கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயிலானது விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் அதாவது திங்கட்கிழமை (8ம் தேதி) இயக்கப்படுகிறது. 11.30 மணியளவில் புறப்படும் சிறப்பு ரெயில் ஈரோடு, திருப்பூர் வழியாக நள்ளிரவு 1.47 மணியளவில் சேலம் வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து மீண்டும் நள்ளிரவு 1.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக அடுத்த நாள் (9ம் தேதி) காலை 7.35 மணியளவில் சென்னை சென்ட்ரலை வந்தடைகிறது. இதைத்தொடர்ந்து பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு பயணிக்க ஆயத்தமாகி வருகின்றனர்.