News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மக்களவைத் தேர்தல் வெற்றி கொடுத்திருக்கும் உற்சாகத்தில் இருக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், எந்தக் காரணம் கொண்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சிறு சறுக்கலும் நடந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பவே உஷாராக இருக்கிறார். அதற்காகவே 9 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமனம் செய்திருக்கிறார்.

விக்கிரவாண்டியில் வன்னியர்களும் ஆதி திராவிடர்களும் அதிக அளவில் இருக்கிறார்கள். இந்த வாக்குகளை குறிவைத்து அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் களம் இறங்கக் காத்திருக்கின்றன. ஆளும் கட்சி மீதான அதிருப்தியை வைத்து எப்படியாவது தி.மு.க.வை சாய்த்துவிடத் துடிக்கிறார்கள்.

அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே முதல் நாளே வேட்பாளரை அறிவித்த ஸ்டாலின், இப்போது தேர்தல் பணிக்குழு அறிவித்துவிட்டார். அதன்படி பொன்முடி, ஜெகத்ரட்சகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், சிவசங்கர், சி.வி.கணேசன்  9 அமைச்சர்களை களம் இறக்கிவிட்டுள்ளார்.

அதோடு நாளை அதாவது ஜூன் 14ம் தேதி தேர்தல் பணிக்குழுவினரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதோடு, தி.மு.க. சார்பில் பெருந்தொகை ஒதுக்கியிருப்பதாகவும், வீட்டுக்கு வீடு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று பணம் சப்ளை செய்வதற்கு ஏற்பாடுகள் நடப்பதாகவும் சொல்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link