News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சந்திரயான்-3 மூலம் நிலவுக்கு செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டர் பனியில் உறைந்து போனதால் மீண்டும் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த ஜூலை 14ம் தேதி எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது கடந்த ஆகஸ்டு மாத்ம 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் புவி மற்றும் நிலவின் வட்டப்பாதையை கடந்து விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை முடித்து நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

 

உலக விஞ்ஞானிகளை இருக்கையின் நுணிக்கே கொண்டு வரும் தருணமாக தரை இறங்கிய 2 மணி நேரத்திற்குபிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து தனது ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது.

 

 

அந்த ஆய்வில் ரோவரில் பொருத்தப்பட்டிருந்த லிப்ஸ் எனப்படும் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி, நிலவில் கந்தகம் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல், அலுமினிய், கால்சியம், இரும்பு, குரோமியம் உள்ளிட்ட கனிமங்களும் நிலவில் இருப்பதை ரோவர் உறுதி செய்து பல்வேறு  கோணங்களில் இருந்து புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியுள்ளது.

 

நிலவுநாள் (14 நாட்கள்) முடிவடைந்து அங்கு இரவு தொடங்கிய போது ரோவர் எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் உறக்க நிலைக்கு சென்றது. மேலும் விக்ரம் லேண்டரும் உறக்கநிலைக்கு சென்றது.

 

அந்த நேரத்தில் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள் நிலவில் முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சத்தால் சார்ஜ் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. 

 

இதற்கிடையில் நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளிபட்டு  உறக்க நிலையில் இருக்கும் ரோவர் மற்றும் லேண்டரை விழிப்பு நிலைக்கு கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் நிலவில் நிலவும் 200 டிகிரி மைனஸ் உறைபனியில் சந்திரயான்3 மற்றும் விக்ரம் லேண்டர் முற்றிலும் செயல்பட முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

உலை போன்ற ஒரு கருவியை இதனுடன் இணைத்து அனுப்பியிருந்தால், ஒருவேளை விக்ரம் லேண்டர் உறைபனியில் இருந்து தப்பித்து சுறுசுறுப்பாக செயலாற்றி இருக்கும் என்ற கருத்தும் தற்போது நிலவுகிறது. இத்தகைய தொழில்நுட்ப கோளாறு காரணமாக அடுத்து என்ன செய்வதென்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கு முன்னர் கடந்த 2013ம் ஆண்டு சீனா செவ்வாய்க்கு அனுப்பிய சேஞ்ச்3 லேண்டர் மற்றும் யூட் ரோவர் ஆகியவை இதுபோன்ற வெப்ப சாதனங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link