Share via:
ஜல்லிக்கட்டு போராளி ஜூலி அதன் பிறகு பிக்பாஸ் ஜூலியாக மாறினார்.
கொஞ்ச நாட்களாக காணாமல் போயிருந்த ஜூலி நேற்று முதல் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார்.
அவர் சென்னையில் விஜய் எங்கு நின்றாலும் எதிர்த்து நிற்கப் போவதாக வரும் செய்தி பெரும்
பரபரப்பாகியுள்ளது.
நேற்று விஜய் பேசிய ஜல்லிக்கட்டு பேச்சு வைரலாக மாறியது. பலரும்
பல்வேறு வகையில் கிண்டலடித்தனர். இதற்கு ஜூலி, ‘நாங்க கஷ்டப்பட்டு போராடி ஜல்லிக்கட்டு
பர்மிஷன் வாங்கி வெச்சிருக்கிறோம்! உங்களோட ரசிகர்கள் போய் புல்லுக்கட்டை காமிச்சு
ஏதாவது ஆச்சுன்னா திரும்ப போராட திராணி இல்லை. ஐம்பதை ஐநூறா மாத்திட்டாதீங்க’ என்று
கொதித்திருந்தார்.
இதற்கு விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஜூலியை எதிர்க்கும் ரசிகர்கள், ‘’நான் தெரியாம தான் கேட்கிறேன்! நீ என்னத்த போராடுனே?
நீ அப்படி என்ன கஷ்டப்பட்ட? காணோம் காணோம் ஓபிஎஸ்ஸை காணோம்னு நாதாரி மாதிரி கத்துனதெல்லாம்
உனக்கு போராட்டமா? முதல்ல உனக்கு போராட்டம்ன்னா என்னன்னு தெரியுமா? அசிங்கம் அசிங்கமா
கேட்டருவேன் அப்புறம் நாறி போயிருவ நாறி த்தூ’’ என்று கெட்ட வார்த்தையில் திட்டி வருகிறார்கள்.
இதை பார்த்து திமுகவினர் ரொம்பவே குஷியாகியுள்ளனர். விஜய் சென்னையில்
எங்கு நின்றாலும் சுயேட்சையாக நின்றால் போதும், செலவுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்
என்று உறுதி கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு முறை சோஷியல் மீடியாவில் வலம் வரும்
வாய்ப்பு என்றதும் சந்தோஷமாக சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
அதேநேரம் விஜய்க்கு திமுகவினர் மூன்று முத்தான கேள்விகள் கேட்டுள்ளனர்.
அதன்படி, ‘’இன்று வேலூரில் விஜய் பேச்சில் அவரது சவால், சவடால் தாண்டி விவாதிக்க வேண்டிய
3 விஷயங்கள் – 1. கரூர் விவகாரம் “கரூர் விவகாரத்தில் என் மேல் ஏன் பழி போட்டீர்கள்?”
என ஸ்டாலினை கேட்கிறார். இதுவரை ஸ்டாலின் நேரடியாக பழி போட்டதாக தெரியவில்லை. ஆனால்,
அதைவிட முக்கியமானது – இப்போதும் கரூர் சம்பவத்தில் தனக்கு துளியளவும் பொறுப்பு இல்லை
என விஜய் நிற்பதுதான். கரூரில் பொதுக்கூட்டம் நடத்தி, அடிப்படை வசதியின்றி மக்களை வெயிலில்
நிறுத்தியது யார்? கட்டுப்பாடின்றி ஆபத்தான உயரங்களில் ஏறி நின்றது யாருடைய கூட்டம்?
அதை ஒழுங்குப்படுத்தத் தவறியது யார்? “பழி போடுகிறார்கள்” என்று சொல்லிவிட்டால் பொறுப்பு
மறைந்துவிடுமா?!
2. ஊழல் குற்றச்சாட்டு & ஒழுக்கப் பேச்சு ஸ்டாலின் உட்பட அனைத்து
அரசியல் தலைவர்களும் கொள்ளை அடித்தவர்கள் என்கிறார். “கணக்கு காட்ட தயாரா?” என கேட்கிறார்.
நமது கேள்விகள் – ரெட் ஜெயண்ட் நிறுவனம் தொடங்கியபோது “அந்த பணம் எங்கிருந்து வந்தது?”
என்று கேட்காமல் அந்த நிறுவனத்தின் முதல் படத்தில் நடித்தது விஜய்தானே?! “புலி”
படத்திற்கு தான் வாங்கிய சம்பளம் 15 கோடியை கணக்கில் காட்டாமல் விஜய் மறைத்து வைத்ததது
ஏன்? இப்போது எப்படி ஊழலுக்கு எதிராக உத்தம வேஷம் போடுகிறார்? மற்றவர்களை ஊழல்வாதி
என அழைப்பது எளிது. தன்னை வெளிப்படையாக வைத்துக்கொள்வதுதான் சவால்.
3. வாக்குறுதிகள் vs நடைமுறை “அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் முதல்
தரமாக இருக்கும்” என்கிறாரே, எந்த வகையில் முதல் தரம்? – உட்கட்டமைப்பு தரமா?
ஆசிரியர் தரமா? ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தவேண்டும் என்றால் அதற்கு செய்யவேண்டிய
சீர்திருத்தங்கள் பற்றி வெளிப்படையாகப் பேச விஜய்க்கு தைரியம் உண்டா?! “மாவட்ட ஆட்சியர்கள்,
SPக்களில் 50% பெண்கள் என மாற்றுவோம்” என்கிறார். முதலில், இவரது கட்சியின் மாவட்ட
செயலாளர்களில் 50% பெண்களாக இருக்கிறார்களா?! “தொழிற்சாலைகள் வரும்” என்கிறார்.
ஆனால் தொழில் வளர்ச்சிக்கு அவசியமான பரந்தூர் விமான நிலையம் போன்ற
போக்குவரத்து உட்கட்டமைப்பை எதிர்க்கிறார். “தொழில் வேண்டும்; ஆனால் அதற்கான வசதி வேண்டாம்”
– இது என்ன, லாஜிக் இல்லாத சினிமா மேஜிக்கா?! மொத்தத்தில், சர்கார் படத்தின்
“ஒரு விரல் புரட்சி” மாதிரி “விசில் புரட்சி” ஒன்றை விஜய் பேசியிருக்கிறார்.
விசிலை வைத்து அறிவுள்ள வாக்காளனின் காதைக் கிழிக்கலாம், ஆனால் அவன் அறிவைக் கிழிக்க
முடியாது.’’ என்கிறார்கள்.
விஜய் டீம் திருப்பியடிக்குமா?
