Share via:
விஜய் ஒரே ஒரு வார்த்தை பேச மாட்டாரா என்று அவரது பனையூர் அலுவலகம்,
பாலவாக்கம் வீடு முன்பு 24 மணிநேரமும் தமிழ் மீடியாக்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
விஜய் செல்லும் இடத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பே காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இதுவரை தமிழ் மீடியாக்களை திரும்பிக்கூட பார்க்காத விஜய், ஆங்கில
ஊடகம் என்றதும் வீட்டுக்கு அழைத்துவைத்து பேட்டி கொடுத்திருக்கிறார். விஜய்க்கு தொடர்ந்து
ஆதரவு கொடுத்துவரும் தமிழ் ஊடகங்களுக்கு இப்படியொரு அவமானம் தேவையா என்ற கேள்வி எழுகிறது.
அதேநேரம் என்.டி.டி.வி.க்கு ஆஃப் கேமரா இன்டர்வியூ கொடுத்தது இப்போது
ட்ரோல் ஆகிவருகிறது. வீடியோ சேனலுக்கு ஆஃப் கேமரா இண்டர்வியூ கொடுத்த ஒரே தலைவர் விஜய்
மட்டும்தான் என்கிறார்.
என்.டி.டி.விக்கு விஜய் கொடுத்திருக்கும் பேட்டியில், ‘’நான் அரசியலுக்கு
ஏன் வந்தேன் என்பதில் தெளிவாக இருக்கிறேன். இதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை.
நான் ஒரு முடிவெடுத்துவிட்டேன். நான் சினிமாவை விட்டுவிட்டேன். இதுதான் (அரசியல்) எனது
எதிர்காலம்.
கோவிட் காலத்திற்குப் பிறகு நான் அரசியலில் ஈடுபடுவது குறித்து
மிகவும் தீவிரமாகச் சிந்தித்து வருகிறேன். இது திடீரென எடுத்த முடிவு அல்ல. ஜனநாயகன்
திரைப்படம்: எனது அரசியல் வருகையால் ‘ஜன நாயகன்’ திரைப்படம் பாதிக்கப்பட்டுள்ளதற்காக
எனது தயாரிப்பாளருக்காக நான் வருத்தப்படுகிறேன். அரசியலால் திரைப்படங்கள் பாதிக்கப்படலாம்
என்பதை நான் எதிர்பார்த்தேன், அதற்காக மனதளவிலும் தயாராக இருந்தேன்..’’ என்று கூறியிருக்கிறார்.
கூட்டணி அமையவில்லையே என்ற கேள்விக்கு ‘’ஆட்சியிலும் அதிகாரத்திலும்
பங்கு என்பது ஒரு கொள்கை ரீதியான முடிவு. அதற்காக நாங்கள் கூட்டணியை நம்பி அரசியல்
கட்சி ஆரம்பிக்கப்படவில்லை. மக்களை நம்பி தொடங்கப்பட்ட கட்சி. கூட்டணி வந்தாலும் வராவிட்டாலும்
நாங்கள் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கிறோம். களம் தமிழக வெற்றி கழகத்திற்கு சாதகமாக
இருக்கிறது. பெரும்பாலான மக்கள் மாற்றத்தை
விரும்புகிறார்கள்…’’ என்று கூறியிருக்கிறாராம்.
விஜய்ன்னா சும்மாவா..?
