Share via:
வருடம் 500 கோடி ரூபாய் வருமானத்தை உதறித்தள்ளிவிட்டு நாட்டு மக்களுக்கு
சேவை செய்ய வந்திருக்கிறார் விஜய் என்று ஒவ்வொரு மேடையிலும் அவரது ஆதரவாளர்கள் பொங்கினார்கள்.
ஆனால், ஒட்டுமொத்த சொத்தே 500 கோடி என்று கணக்கு காட்டியிருக்கிறார்.
விஜய்க்கு ‘தி கோட்’ படத்தில் ரூ.200 கோடியும், ஜனநாயகன் படத்துக்கு
ரூ.250 கோடி சம்பளம் என கூறியிருந்தனர். அப்படியிருக்கும்போது பிரமாண பத்திரத்தில்
சொத்து மதிப்பு மொத்தமாக ரூ.520 கோடி என குறிப்பிட்டுள்ளார். தனிநபர் வருமான ஒரு வருடத்திற்கு
500 கோடி இருக்கும் போது வருமான வரி போக 450 கோடி என்று வைத்துக்கொண்டாலும்.. மொத்த
சொத்து 520 கோடி எப்படி வரும் என்று கேள்வி கேட்கிறார்கள்..
30 வருடங்களாக சினிமாவில் உச்சத்தில் இருந்த விஜய் அரசாங்கத்தை
ஏமாற்றியிருக்கிறாரா? அவர் சம்பாதித்த மீதிப் பணம் எங்கே போனது? வெளிநாடுகளில் முதலீடு
செய்துள்ளாரா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
அதோடு விஜய் எத்தனை பெரிய சுயநலவாதியாக இருந்தால், மனைவி மீதோ
அல்லது தன் மகன், மகள் மீதோ ஒரு சென்ட் நிலம் கூட வாங்காமல் எல்லாவற்றையும் தன் பெயரில்
வாங்கியிருப்பார். அதோடு அம்மா, அப்பா, மகன், மகளுக்கு கொடுத்த பணத்தை எல்லாம் கடன்
என்று காட்டியிருக்கிறார்.
இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கும்போது, அவர் பெயரில் ஒரு டிவிஎஸ்
எக்செல் சூப்பர் ஒன்று 67,400 ரூபாய்க்கு வாங்கியிருப்பதையும் சொத்துக்கணக்கில் காட்டியிருக்கிறார்.
இது யாருக்கு, எதுக்கு என்று அவரது ரசிகர்கள் படபபடப்பாகிறார்கள்.
அதேபோன்று ஆதவ் அர்ஜூனாவின் சொத்துக் கணக்கும் பரபரப்பாகியுள்ளது.
அவர் ங்கை சீதாலட்சுமிக்கு 46 கோடி கொடுத்து இருக்கார். 66 கோடி ரூபாயை வாய்ஸ் ஆஃப்
காமன் நிறுவனத்திற்கு கடன் கொடுத்து இருக்கிறார். அதோடு ஆதவ் அர்ஜுனாவின் பிரமாண பத்திரத்தில்
தெளிவாக கரூர் 41 பேர் மரண வழக்கில் தன் மீது BNS 105,110,125(B), 223 பிரிவுகளின்
கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தலை சுத்த வைக்கிறாங்கப்பா…
