Share via:
கோடிக்கணக்கில் வாங்கும் சம்பளத்தை விட்டுக்கொடுத்துவிட்டு அரசியலுக்கு
வந்து மக்களுக்கு சேவை செய்கிறார் நடிகர் விஜய் என்று ஏகப்பட்ட பில்டப் கொடுத்துவருகிறார்கள்.
ஆனால், இது எல்லாமே உண்மை இல்லை என்பது போன்று விஜய் பிறந்த நாளில் நடிகை த்ரிஷா, மமிதா
பாஜுவும் பேசியிருக்கிறர்கள்.
விஜய் பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பார், உற்சாகமாக பரபரப்பாக
ஏதேனும் செய்தி வரும் என்று விஜய் ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், த்ரிஷாவின்
நாய்க் குட்டியைக் கொஞ்சும் போட்டோவைப் போட்டு ஒரு ஸ்வீட்டான வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள், ‘கில்லி ஜோடி… கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர், வழித்துணை’
என்றெல்லாம் பாராட்டிக்கொண்டு இருந்தார்கள்.
இந்த நேரத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த மம்தா பாஜு, ‘’ஜனநாயகன்
கடைசிப் படமா என்று கேட்டேன். அதற்கு அவர் அரசியலில் என்ன முடிவு கிடைக்கப் போகிறது
என்பதைப் பார்த்துவிட்டு, அதை வைத்தே முடிவு செய்வேன் என்று கூறியிருக்கிறார்’’ என்று
ஜாலியாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து ஜனநாயகன் கடைசிப் படம் இல்லையா… தோல்வி அடைந்தால்
உடனே மீண்டும் சினிமாவில் நடிக்கப் போய்விடுவாரா என்று அவரது ரசிகர்கள் அதிர்ந்து நிற்கிறார்கள்.
இதையொட்டி விஜய் ரசிகர்கள், ‘’ரசிகர்களை சந்திக்காத விஜய்க்கு
த்ரிஷாவை சந்திப்பதற்கு மட்டும் நேரம் இருக்கிறது. அதேபோல் சினிமா, அரசியல் முடிவுகளை
எல்லாம் நடிகைகளிடம் மட்டுமே பேசுகிறார். அப்படின்னா நாங்க எல்லாம் காமெடி பீஸுங்களா’
என்று கொதிக்கிறார்கள்.
விஜய்க்கு இப்போதுதான் அரசியல் புரிந்திருக்கிறது.