News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

டாஸ்மாக் போராட்டத்தின் போது அண்ணாமலை திடீரென நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர், ‘’தவெக எல்லையை மீறக்கூடாது. விஜய் மாதிரி இடுப்பு கிள்ளிட்டு அரசியல் பண்ணிட்டு இருக்கேனா… விஜய் 50 வயதில் தான் அரசியலுக்கு வரணுமா, 30 வயதில் எங்கு சென்றார். திமுகவின் பி டீம் தான் விஜய்..’’ என்று கடுமையாக விமர்சித்தார். இதற்கு ஆதாரம் என்று விஜய்யுடன் உதயநிதி இருக்கும் படத்தை அமர்பிரசாத் ரெட்டி ரிலீஸ் செய்தார். அதோடு விஜய் சினிமா கில்மா ஸ்டில்கள் வகைவகையாக கொட்டப்படுகின்றன.

இதற்கு பதிலடி தரும் வகையில் தவெக தொண்டர்கள் சமூகவலைதளங்களில் புகுந்து விளையாடுகிறார்கள். விஜய் நிர்வாகிகள், ‘’விஜய்யை போல் இடுப்பை கிள்ளி அரசியல் செய்கிறேனா என்று அண்ணாமலை தனிப்பட்ட தாக்குதல் தொடுக்கிறார். நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான அதிகம் குற்றங்கள் புரிந்த கட்சி பாஜக. பாஜகவின் சிட்டிங் எம்பி, எம்எல்ஏ என்று மொத்தம் 54 பேர் ! இந்த லட்சணத்தில் நீங்கள் வெறும் நடிப்பை குறை சொல்லலாமா?

மோடி அமித்ஷா போன்ற உங்களின் முதலாளியை தான் விமர்சனம் செய்வேன். உங்களை மதிப்பதில்லை. நீங்கள் வெறும் ஒரு கிளையில் மேனேஜர். எந்த திறமையும், அனுபவமும் இல்லாமல் பி எல் சந்தோஷ் காலை பிடித்து பதவியில் அமர்ந்தவர் நீங்கள். சாதி, மதம் என்று காட்டுமிராண்டி காலத்து கருத்தியலோடு அரசியல் செய்யும் உங்களுக்கு என்ன அறிவு இருக்க போகிறது? அறிவற்ற தற்குறி என்று புரிந்ததால் தான் தமிழ்நாடு இன்னும் உங்களை கவுன்சிலராக கூட ஆக்கவில்லை. விஜய்யை விமர்சிக்க நிறைய இருக்கிறது. வழக்கம் போல் அவர் மதத்தை இழுக்கலாம், அல்லது அவரின் கொள்கை தலைவர்கள் பெரியார் அண்ணல் அம்பேத்கருக்கு எதிராக சாவர்க்கரை தூக்கி பிடிக்கலாம்.

இது தான் வழக்கமான பாஜக மூடர்கள் செய்வார்கள். நீங்கள் ஒருபடி மேலே போய் அவர் இடுப்பு கிள்ளுவதை ஏன் பேசுகிறீர்கள்? Are you obsessed with him? விஜய் இடுப்பை கிள்ளுவதை தான் தினமும் பெட்ரூமில் படுத்துக்கொண்டு கற்பனை செய்கிறீர்களா? இது வேறு மாதிரியான உளவியல் சிக்கல். இதற்கு ஒரு பெயர் உண்டு, கூகுள் செய்யவும். சமூக அறிவு இல்லை என்று தெரியும். உங்கள் மனநிலையையாவது சரி செய்து கொள்ளுங்கள். அப்புறம் எப்போதும் சொல்வது தான் “தமிழ்நாட்டில் தாமரை மயிரில் கூட மலராது’’ என்று போட்டுத் தாக்குகிறார்கள்.

இந்நிலையில் அ.தி.மு.க.வில் இருக்கும் காயத்ரி ரகுராம், ‘’சினிமா துறையையும் நடிகைகளையும் அண்ணாமலை அசிங்கப்படுத்திவிட்டார். ஹேமா கமிட்டி உடனடியாக அண்ணாமலை மீது ஒரு வழக்கு பதிய வேண்டும். குஷ்பு, ராதிகா, சரத்குமார் என அனைவரும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். நடிகர் சங்கத்தைச் சேர்ந்த விஷால், நாசர், கார்த்தி எல்லாம் என்ன செய்கிறார்கள்?’’ என்று சினிமா ஆட்களை களத்திற்கு இழுக்கிறார்.

விஜய் சில்மிஷ வீடியோக்களையும் கில்மா புகைப்படங்களையும் பா.ஜ.க.வினர் வைரலாக்கி வருகிறார்கள். செம என்டர்டெயின்மென்ட். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link