Share via:
நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்
மாநில மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு
தந்தை சந்திரசேகருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதுடன், எந்தக் காரணம் காட்டியும்
அங்கே வந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கை கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பதற்காக மாநாடு
நடைபெற இருக்கும் விக்கிரவாண்டியில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தீவிரம் காட்டி வருகிறார்.
மழை வந்தாலும் பாதிக்கப்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநாட்டு ஆலோசனையில் ஒரு நிர்வாகி, ‘தளபதியின் அப்பா எஸ்.ஏ.சி. .மாநாட்டுக்கு
வருவாரா’ என்று கேட்டுவிட, கொதித்துவிட்டாராம் ஆனந்த்.
‘இதையெல்லாம் நீங்க பேசக்கூடாது, கேட்கக் கூடாது. குடும்பக் கட்சின்னு
பேர் வாங்கக்கூடாதுங்கிறதுல தளபதி உறுதியா இருக்கார். அதனால யாரும் வரமாட்டாங்க, போஸ்டர்ல
யாரும் அவர் படத்தைப் போட்டுராதீங்க’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறாராம். இதையே விஜய்க்கு
நெருக்கமான மற்றவர்களும் உறுதி செய்கிறார்கள்.
சமீபத்தில் முரசொலி செல்வம் மறைவுக்கு விஜய் மனைவி சங்கீதா வந்தார்.
எனவே, இந்த நிகழ்வுக்கு விஜய்யின் மனைவி சங்கீதா கண்டிப்பாக வரவேண்டும் என்று ரசிகர்கள்
எதிர்பார்க்கிறார்கள். ஆனால், கட்சி நிகழ்ச்சியில் மனைவி, மகன் ஆகியோரை காட்டுவதற்கு
ஆர்வம் காட்டவில்லை. அதேநேரம், கட்சி தொடங்கிய நாளில் இருந்து ஆதரவு தெரிவிக்கும் கீர்த்தி
சுரேஷ் நிச்சயம் வருவார் என்கிறார்கள். அதுவும் மனைவி சங்கீதா வரவில்லை என்றால் மட்டும்
கீர்த்தி சுரேஷ் வர வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.