Share via:
0
Shares
இந்த உலகிலேயே ஒரே ஒரு அறிக்கை மட்டும் கொடுத்து கட்சி தொடங்கிய
முதல் நபர் நடிகர் விஜய் மட்டும் தான். அவரது தமிழக வெற்றி கழகம் பெயரில் தவறு இருக்கிறது,
க் சேர்க்க வேண்டும் என்று பலரும் சொல்லிவந்தார்கள்.
இத்தனை நாளும் அமைதியாக இருந்த விஜய் திடீரென, க் சேர்க்கச்
சொல்லிவிட்டார். எனவே இனி விஜய் கட்சி தமிழக வெற்றிக் கழகம் என்று அழைக்கப்படுமாம்.
ஆனால், அவரது ரசிகர்கள் கோரிக்கை வேறாக இருக்கிறது. ‘கட்சி விவகாரம்
பேசுவதற்கும் அன்பாகப் பழகுவதற்கும் புஸ்ஸி ஆனந்த சரியான நபராக இல்லை. ஆகவே, அப்பா
எஸ்.ஏ.சந்திரசேகரை கொண்டுவாருங்கள். நாங்கள் ரசிகர் மன்றத்தில் இருந்த காலம் முழுக்க
எங்களுக்கு ஊக்கம் கொடுத்தவர் அவர் மட்டும் தான் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இதற்கு விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று பார்க்கலாம்…
Tagged latest