Share via:
நடிகர் விஜய் அரசியல்
களத்திற்கு வந்துவிட்டால் உதயநிதிக்கு சவாலாக இருப்பார் என்பதால் தி.மு.க.வினர் சமூகவலைதளங்களில்
கடுமையாக எதிர்ப்பு காட்டி வருகின்றனர். குறிப்பிட்ட தேதியில் விஜய் மாநாட்டை நடத்திவிடக்
கூடாது என்பதற்காக திட்டமிட்டு இடைஞ்சல் செய்துவருவதாக அவரது ரசிகர்கள் கொதிக்கிறார்கள்.
விஜய் ஜாதகப்படி
வட தமிழ்நாட்டில் செப்டம்பர் 23ம் தேதி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று நாள் குறிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து,
விழுப்புரம் மாவட்டத்தில்
உள்ள விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு, அக்கட்சியின் பொதுச்செயலாளர்
புஸ்ஸி ஆனந்த் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து மாவட்ட
ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு
செய்தனர். இதையடுத்து எந்த நேரமும் அனுமதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், எக்கச்சக்க கேள்விகள் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
காவல் துறை சார்பில்
எழுப்பப்பட்டிருக்கும் கேள்வியில், ‘’மாநாட்டிற்கு எத்தனை வாகனங்கள் வருவதற்கான வாய்ப்பு
உள்ளது? மாநாட்டில் பங்கேற்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடு
என்ன?
மாநாட்டில் கலந்து
கொள்ள வருபவர்களுக்கு உணவு எப்படி வழங்கப்பட உள்ளது? மாநாடு முடிந்த பிறகு அங்கே இருக்கும்
குப்பைகளை சுத்தம் எப்படி செய்வது? மாநாடு அமைக்க நடைபெறும் மேடை எத்தனை அடி நீளம்
அகலத்தில் அமைக்கப்பட உள்ளது ? வி.ஐ.பி.களுக்கு சிறப்பு வழி இருக்கிறதா..? இருக்கைகள்
எவ்வளவு அமைக்கப்பட உள்ளது?
பல்வேறு ஊர்களில்
இருந்து வருபவர்களுக்கு மாநாட்டில் வாகனங்கள் நிறுத்த எந்த பகுதிகள் ஒதுக்கி பார்க்கிங்
வசதி செய்யப்படுகிறது? வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் மாநாட்டிற்கு வருகை புரிந்தால்
குடிநீர் வசதி, மருத்துவம் பார்க்க ஆம்புலன்ஸ் வசதி எங்கு செய்யப்படுகிறது என்ற்ல்லாம்
21 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது.
காவல் துறைக்கு கொடுத்த
கோரிக்கை மனுவிலேயே இந்த பதில்கள் தெளிவாக இருக்கும் நிலையில் திட்டமிட்டு தேதியைத்
தள்ளிப்போடுவதற்காக இப்படி கேள்விகள் எழுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. இதற்கெல்லாம்
பதில் கொடுத்தாலும் உடனடியாக அனுமதி கொடுப்பார்களா என்று தெரியவில்லை என்றே சொல்லப்படுகிறது.
மீண்டும் மீண்டும் கேள்விகள் எழுப்பி விஜய் மாநாட்டை தள்ளிப் போடுவதற்கு திட்டம் போடபடுகிறதாம்.
அடுத்த மாதம் மாநாடு
வைக்கப்பட்டால் மழை வதுவிடும். மேலும் விஜய்க்கு ஜோதிடர் குறித்துக் கொடுத்த தேதியில் மாற்றம் நிகழ்ந்தால்
வெற்றி கிடைக்காது என்பதாலே தி.மு.க. விளையாட்டு காட்டுவதாக கோபத்தைக் காட்டுகிறார்கள்
விஜய் நிர்வாகிகள்.