News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

காங்கிரஸ் கட்சித் தலைவர் வேணுகோபால் சமீபத்தில் சென்னைக்கு வந்து பேசிய பிறகும் திமுக கூட்டணி இன்னமும் தெளிவான முடிவுக்கு வரவில்லை என்பதையே காங்கிரஸ் கட்சி மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கொடுத்திருக்கும் பேட்டி காட்டுகிறது.

அவரது பேட்டியில் திமுக இன்னும் எங்களை அழைக்கவில்லை. பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். எங்களது பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுக்கள் இன்னும் முடிவடையவில்லை, அது தொடரும்.

பஞ்சாயத்து, உள்ளாட்சி மற்றும் மாநகராட்சி அளவில் அதிகாரப் பகிர்வு குறித்து அவர்கள் விவாதித்தனர். எங்களுடைய முக்கிய நிபந்தனை தொகுதிகள் குறித்ததுதான், எங்கள் குழுக்கள் சந்தித்த பிறகு அது குறித்துத் தெரிவிக்க முடியும். மாநில அளவில் அதிகாரப் பகிர்வை காங்கிரஸ் விரும்புகிறது. எந்த அரசியல் கட்சி அதிகாரத்தை வேண்டாம் என்று சொல்லும்? நாங்கள் ஒரு அரசியல் கட்சியை நடத்துகிறோம், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை அல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதன் சொந்த விருப்பங்கள் உள்ளன.

டிவிிகே எங்களை வெளிப்படையாக அழைத்து, எங்களுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. அதாவது அவர்கள் எங்களது அடிமட்ட பலத்தை அங்கீகரித்துள்ளனர். அரசியலில் அனைவரிடமும் பேச வேண்டும். தகவல் தொடர்பு ஒருபோதும் நின்றுவிடாது. பரம எதிரிகள் கூட பேசிக் கொள்வார்கள்…’’ என்று கூறியிருக்கிறார்.

ஆக, விஜய் அழைப்பும் காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பும் திமுகவுக்குச் சிக்கலை கொடுத்துவருகிறது. இந்த சூழலில் மார்ச் 5ம் தேதி மார்ச் 5 ஆம் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று தேர்தல் பிரசாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளார். இந்த நேரத்திற்குள் அத்தனை பஞ்சாயத்துகளும் முடிவுக்கு வந்துவிடும் என்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link