Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2025/01/MergedImages-2025-02-08T120212.761.jpg)
நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு ஆலோசனை நடத்திய காலம் தொடங்கி
அவருடன் நெருக்கமாக இருந்தவர் அய்யநாதன். அவர் விஜய் கூட்டணி குறித்து வெளிப்படையாகப்
பேசிய விவகாரம் அவரது கட்சியினரை அதிர வைத்திருக்கிறது.
கடந்த ஜனவரி 2ம் தேதி விஜய்யுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து
அய்யநாதன், ‘’அ.தி.மு.க.வுடன் கூட்டணி சரியா வராது. ஒன்னு எடப்பாடிய நீங்க ஏத்துக்கணும்,
இல்ல உங்கள முதல்வர் வேட்பாளரா அதிமுக ஏத்துக்கணும் ரெண்டும் நடக்காதுன்னு சொல்லியிருக்காரு
அதுக்கு விஜய் இரண்டாவது ஆப்ஷனுக்குத் தான் வொர்க் பண்ணிட்டு இருக்கோம்’’ என்று கூறியிருக்கிறார்.
தனித்து நின்று போட்டியிட்டு தமிழக முதல்வராக விஜய் மாறுவார் என்று
இத்தனை நாட்களும் ஆவேசமாகக் குரல் கொடுத்துவரும் விஜய் ரசிகர்கள் அய்யநாதன் பேச்சைக்
கேட்டு அதிர்ந்து நிற்கிறார்கள். அய்யநாதன் சொன்னது பொய் என்று கட்சி சார்பில் யாரும்
மறுப்பும், எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் விஜய் ஆதரவாளர்கள், ‘’இப்படி சகுனி வேலை பார்ப்பவர்கள்
பேசுவதை நம்ப வேண்டாம். அய்யநாதனிடம் தலைவர் விஜய் “தனித்து களம் காண்பது, நம்
தலைமையில் களம் காண்பது, அதிமுக கூட்டணி எல்லாவற்றையும் பேசியிருப்பார். அதில் ஒன்றை
மட்டும் உருவி சகுனி வேலை பார்த்துவிட்டார் அய்யநாதன்.
நீங்கள் எல்லாம் பொது
தொகுதிக்கு ஆசைப்படலாமா? என்று கருணாநிதி கேட்டதாக வன்னியரசு சொன்னார். ஆனால் உண்மையில்
கருணாநிதி என்ன சொல்லியிருப்பார்? இதை நம்பலாமா வேண்டாமா? இதுவும் ஒரு வகை உருவல் தான்.
இதுபோல் கருணாநிதி அதை சொன்னார், ஜெயலலிதா இதை சொன்னார் என்று பல சம்பவங்கள் இருக்கிறது.
அரசியல் வரலாறு முழுக்க இப்படிப்பட்ட சகுனி வேலைகள் நிரம்பி இருக்கின்றன.
ஜான் ஒன்று சொல்லியிருப்பார் அய்யநாதன் ஒன்று சொல்லியிருப்பார்
இருவருக்கும் ஈகோ வந்திருக்கும் அது சண்டையாக மாறி அய்யநாதன் பழி தீர்க்கிறார். பதவி
கிடைக்காத விரக்தி. இதுவும் ஒரு காரணம். இது எல்லா கட்சிகளிலும் நடக்கும். ஈகோவால்
தானே அழகிரியே ஸ்டாலினோடு சண்டைபோட்டுக்கொண்டு இருந்தார். அய்யநாதன், பத்திரிகையாளர்
மணி இன்னும் பலர். எவரையும் நம்பாதீர்கள்..’’ என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.
இந்த விளக்கத்தை தலைவர் விஜய் அல்லது மற்ற நிர்வாகிகள் சொல்லாமே.
ஏன், அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்றும் சொல்லலாமே, ஏன் விஜய் அமைதியாக இருக்கிறார்
என்பதே கேள்வி.