News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சினிமா பாணியில் மாநாட்டு மேடையில் பஞ்ச் டயலாக் பேசிய விஜய்க்கு, ‘இது பஞ்ச் டயலாக் இல்ல தம்பி நெஞ்சு டயலாக்’ என்று கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார் சீமான். இதற்கு சீமான் கட்சியினர் அமைதி காத்து வருகிறார்கள். மேலிடத்திலிருந்து உத்தரவு வராத காரணத்தால் சீமானை பொருட்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறார்கள். அதேநேரம், சீமானுக்குப் பதில் சொல்வதற்கும் விஜய்க்கு ஆதரவாகப் பேசுவதற்கும் விஜயலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்ற செய்தியறிந்து நாம் தமிழர் கூடாரம் கதிகலங்கிப் போயிருக்கிறது.

நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து சீமான் மீது கடுமையான விமர்சனம் வைத்துவருகிறார். ஆனாலும், அவரை எந்தக் கட்சியும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் விஜயலட்சுமியை கையில் எடுக்க விஜய் கட்சியினர் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. சீமானுக்கு அவருடைய பாணியிலே பதிலடி கொடுக்க விஜயலட்சுமியே சரியான சாய்ஸ் என்று முடிவெடுத்து இருக்கிறார்களாம். இதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாகவும் எந்த நேரமும் விஜய்க்கு சாதகமான முடிவு வரலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் விஜய் ஆதரவாளர்களில் சிலர் மட்டும் சீமானுக்கு எதிராகப் பொங்கியிருக்கிறார்கள். விஜய் ரசிகர்கள், ‘’சீமான் இங்கீதம் இல்லாத அறிவில்லாத தற்குறி என்பது பலருக்கும் தெரிந்தது தான். அதன் வெளிப்பாடே கூமுட்டை கொள்கை என்பதும், லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய் என்பதும். சமூக அறிவில்லாத சீமான் இனியும் இதைவிட மட்டமாக பேசுவார். அதற்கான தேவை அவருக்கு இருக்கிறது. ஏனென்றால் விஜய்யால் நான்காம் ஐந்தாம் இடத்திற்கு அவர் கட்சி தள்ளப்பட போகும் ஆற்றாமை.

தற்குறி சீமானிற்கு 30 லட்சம் ஓட்டு மட்டுமே விழுந்திருகிறது. ஆனால் ஒரு தேர்தலை கூட சந்திக்காத நம் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை மட்டும் 60 லட்சம். 60 லட்சம் உறுப்பினர் + உறுப்பினர் அல்லாத மக்கள் எத்தனை எத்தனை லட்சம் ஓட்டுகள் நமக்கு 2026-ல் விழும் என்பதை எண்ணி பாருங்கள். நம் கிட்டகூட நாதக என்னும் மூடர் கூடம் வரமுடியாது. இதை உணர்ந்ததால் தற்குறி சீமான் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்..’’ என்று பட்டியல் போடுகிறார்கள்.

விஜயலட்சுமி வந்தால் தான் அரசியல் களம் சூடு பிடிக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link