Share via:
தேமுதிக நிறுவனத்
தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முழு உருவச்சிலையைத் திறந்து வைத்தார்.
விஜயகாந்த் உருவச்சிலையைத்
திறந்து வைத்ததும் உணர்ச்சி மேலிட, சிலையைக் கட்டித் தழுவி கண்ணீர் சிந்தினார். அதைக்
கண்டு விஜயகாந்த் மகன்கள் இருவரும் கண்ணீர் சிந்தினார்கள். தே.மு.தி.க. தலைமையகம் இனி
கேப்டன் ஆலயம் என்று அழைக்கப்படும் என்ற அறிவிப்பையும் பிரேமலதா வெளியிட்டார்.
வறுமை ஒழிப்பு தினமாக
விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்படுவதால் இன்று முழுக்க அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜயகாந்த் பிறந்த நாளுக்கு போட்டி போட்டி பல கட்சியினர் வாழ்த்து தெரிவித்து
வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி
வாழ்த்து தெரிவித்திருக்கும் அதேநேரத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து
தெரிவித்தார். வரயிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.வையும் பா.ஜ.க.
கூட்டணியில் சேர்ப்பதற்கு அண்ணாமலை தீவிர முயற்சி எடுத்துவருவதால் தே.மு.தி.க.வுக்கு
மதிப்பும் மரியாதையும் பெருகிவருகிறது.
விஜயகாந்த் இறந்தாலும்
மதிப்புடன் வாழ்கிறார் என்பதையே இது காட்டுகிறது. அதேநேரம், இந்த சிலை விஜயகாந்த் மாதிரியே
இல்லை. இன்னும் கொஞ்சம் நல்லா செலவழிச்சு அவரை மாதிரியே வச்சிருக்கலாம் என்று அவரது
ரசிகர்கள் வேதனைப்படுகிறார்கள்.