News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

 

தே.மு.தி.க. தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கடந்த 18ம் தேதி சளி, இருமல் காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது எனவே எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் என்று தே.மு.தி.க. நிர்வாகிகள் அறிக்கை மூலம் ரசிகர்களையும், தொண்டர்களையும் கேட்டுக் கொண்டனர்.

 

அதைத்தொடர்ந்து  மருத்துவமனை நிர்வாகம் கடந்த 24 மணி நேரமாக விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும், நுரையீரல் குறித்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கை வெளியிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், விஜயகாந்த் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை மேற்கொண்டனர். அதோடு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரையுலகத்தினரும் விஜயகாந்தின் நலமுடன் திரும்ப வேண்டும் என்று தெரிவித்தனர்.

 

இதனால் தொடர்ச்சியாக விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவிய வண்ணம் இருந்து வந்தன. இதனால் தே.மு.தி.க. பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த், தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், விஜயகாந்த் விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொண்டார்.

 

இந்நிலையில் மருத்துவமனை சிகிச்சையில் இருந்த விஜயகாந்த், பூரண குணமடைந்து தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். இது குறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு.விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்’’ என்று இன்று தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link