கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழகமே திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் தமிழக அரசு இறுதி மரியாதையுடன் அவரது உடல் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தலை தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணியில் சந்தித்தது. விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கேப்டனின் மூத்த மகன் விஜயபிரபாகரன் வெறும் 4ஆயிரத்து சொச்ச்ம வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் வெற்றியை பறி கொடுத்தார்.

 

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் கோட் திரைப்படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் காட்சிகள் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் மூலம் எடுக்க கேப்டனின் மனைவி பிரேமலதாவிடம் அனுமதி வாங்கப்பட்டது. இருப்பினும் எடுக்கப்பட்ட காட்சிகளை சரிபார்த்த பிறகே திரையிட அனுமதி அளிப்போம் என்று பிரேமலதா விஜயகாந்தும், அவரது 2 மகன்களும் தெரிவித்திருந்தனர்.

 

அதன்படி படத்தில் 1 நிமிட காட்சியில் விஜயகாந்தின் ஏ.ஐ. காட்சிகள் இடம்பெறுவதாக அவரது 2வது மகன் சண்முக பாண்டியன் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்தார்.

 

இந்நிலையில் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா திடீரென்று செய்தியாளர்கள் சந்திப்பில் எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். அதில், மறைந்த கேப்டன் விஜயகாந்த்தை ஏ.ஐ. மூலம் திரைப்படங்களில் முன் அனுமதி இல்லாமல் பயன்படுத்த வேண்டாம். சமீப காலமாக விஜயகாந்தின் ஏ.ஐ. காட்சிகள் தங்கள் திரைப்படத்தில் இருப்பதாக பல விளம்பரங்கள் வருகின்றன. அப்படி யாரும் எங்களிடம் அனுமதி பெறவில்லை. முறையான அனுமதி இல்லாமல் கேப்டன் விஜயகாந்தின் ஏ.ஐ. காட்சிகளை பயன்படுத்த வேண்டாம். மீறி பயன்படுத்தினால் சக்க சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link