Share via:
கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்.
இவருக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர், சகோதரர் சேகர், உறவினர் பிரவீன் உள்பட 7 பேர் மிரட்டி எழுதி வாங்கியதாக
வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை ₹100 கோடி
மதிப்பில் போலி ஆவணம் தயாரித்து மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் கொடுத்தார்.
இந்த வழக்கி சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் தனக்கு முன்பிணை கேட்டு கரூர் மாவட்ட முதன்மை நீதி
மன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடல் நிலையைக் காரணம் காட்டி மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் 8 தனிப்படைகள் அமைத்து
தலைமறைவான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவருக்கு அடைக்கலம் கொடுத்த நபர் குறித்து போலீஸார் விசாரணை செய்துவருகிறார்கள். இதில்
மாஜி அமைச்சர் ஒருவர் மாட்டுவார் என்று சொல்லப்படுகிறது.