Share via:
இன்னும் மூன்றே நாட்களில் விஜய் கட்சியின் முதல் மாநாடு நடக்கயிருக்கும்
நிலையில், 27ம் தேதி மழை வரக்கூடாது என்று விஜய் கட்சியினர் யாகம், பூஜை நடத்தியது
வில்லங்கமாக மாறிவருகிறது. நடிகர் விஜய்யும் வீட்டில் மழையைத் தடுக்க பிரத்யேக யாகம்
நடத்தியதாகப் புகார் சொல்கிறார்கள்.
வரும் 27ம் தேதி விக்கரவாண்டியில் நடக்க இருக்கும் விஜய் மாநாட்டுச்
செய்திகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெரியார், காமராஜர்,
அம்பேத்கர் ஆகியோருடன் நடிகர் விஜய் கட் அவுட் வைக்கப்பட்டது வெளியே தெரியவந்தது. இதையடுத்து,
பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு ஏன் கட் அவுட் வைக்கவில்லை
என்று திராவிடக் கட்சியினர் கடும் விமர்சனம் வைக்கிறார்கள்.
அதேநேரம் விஜய் கட்சியினர், ‘’எங்கள் கட்சியின் கொள்கை என்னவென்று
கேட்டவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் இந்த மூன்று தலைவர்கள்தான் எங்களின் கொள்கை.
இவர்கள் பேசிய சமத்துவ, சமூகநீதி கொள்கையே எங்களின் கொள்கை. எங்களின் வழிகாட்டி. இதைத்
தான் விஜய் மேடையில் இரண்டு மணி நேரம் முழங்க இருக்கிறார்’’ என்றும், ‘’அண்ணா, எம்.ஜி.ஆர்.
மீது எங்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. ஆனால், பேரறிஞர் அண்ணாவை புரட்சித்தலைவர்
பின்பற்றினார். அண்ணாவோ பெரியாரைப் பின்பற்றினார். இவர்கள் பின்பற்றிய பெரியார் கொள்கை
எங்களுக்கு இருப்பதால் இவர்கள் படம் வைக்கத் தேவையில்லை’’ என்று பதிலடி கொடுக்கிறார்கள்.
விஜய் மாநாட்டு மேடை 60 அடிஅகலம், 170 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு முகப்பு செயின்ட் ஜார்ஜ் கோட்டை போல அமைக்கப்படுகிறது. மாநாடு பந்தலில்
சுமார் 75 ஆயிரம் இருக்கைகள்போடப்பட உள்ளன. மாநாடு நடைபெறும் பகுதியில்எதிர்பாராது
மழை பெய்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மணல் பரப்பில் ஜல்லி கற்கள் குவியல் குவியலாக
கொட்டப்பட்டு நிலப் பரப்பு உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மாநாடு நடைபெறும் நாளன்று மழை பெய்யாமல் இருக்க நேற்று
அதிகாலை த.வெ.க சார்பில் யாகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் விஜய்
வீட்டிலும் மாநாடு வெற்றியடையவும், மழை வராமல் தடுக்கவும் மூன்று நாட்கள் யாகம் நடப்பதாக
சொல்லப்படுகிறது. இதற்கு இயற்கை சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
’’தமிழகத்திற்கு மழை கிடைப்பது என்பது இயற்கை கொடுக்கும் மாபெரும்
வரப்பிரசாதம். அதை தடுப்பதற்கு விஜய் கட்சியினர் முயற்சி செய்வது அப்பட்டமான சுயநல
அரசியல். மழை இல்லை எனில் விவசாயம் இல்லை, குடிக்கத் தண்ணீர் இல்லாமல் போய்விடும்.
மாநாட்டு வெற்றிக்காக விஜய் யாகம் நடத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு சுயநலமே முக்கியம்
என்பது புரிகிறது’’ என்கிறார்கள்.
அடுத்து பில்லிசூனியம் வைக்காமல் இருந்தால் சரிதான்.