Share via:
கடந்த நாலைந்து நாட்களாகவே விஜய்யின் மதுரை வருகை பற்றி செய்திகள்
கசிந்தன. இந்த நிலையில் தனி விமானத்தில் மதுரைக்கு வந்த விஜய், அங்கிருந்து கொடைக்கானல்
சூட்டிங் சென்றதும், விமானநிலையத்தில் கூடிய மிகப்பெரும் கூட்டமும், அவரது முதல் செய்தியாளர்
சந்திப்பும் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளன.
நேற்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு முதன்முதலாக
பேட்டியளித்த நடிகர் விஜய், ‘நான் மதுரைக்கு ஜனநாயகன் படம் வேலைக்காக செல்கிறேன். கொடைக்கானலில்
ஒரு சூட் பார்க்கப் போகிறேன். கூடிய சீக்கிரம் மதுரை மண்ணுக்கு, வேறு ஒரு சந்தர்ப்பத்தில்
வந்து உங்கள் அனைவரையும் மீட் பண்ணி பேசுகிறேன். மதுரை மக்கள் சேப்பா, அவரவர் வீட்டிற்கு
சென்று விட வேண்டும்.
என்னுடைய வேனுக்குப் பின்போ, காருக்குப் பின்போ யாருமே பாலோ பண்ணுவது,
பைக்கில் பாஸ்ட்டாக வருவது, பைக் மேல் நின்று கொண்டு ஓட்டுவது, ஹெல்மெட் இல்லாமல் பைக்
ஓட்டுவது, போன்றவைகளை செய்யாதீர்கள். அந்தக் காட்சிகளை எல்லாம் பார்ப்பதற்கு, மனசுக்கு
ரொம்ப பதற்றமாக இருக்கிறது. கூடிய சீக்கிரம் வேறு ஒரு சந்தர்ப்பத்தில், உங்கள் அனைவரையும்
மீட் பண்ணி பேசுகிறேன்’’ என்று கூறினார். தொடர்ந்து, செய்தியாளர்கள் சில கேள்விகளை
எழுப்பியதற்கு எந்த பதிலும் சொல்லாமல் கிளம்பிவிட்டார்.
இது குறித்து திமுகவினர், ‘’படப்பிடிப்புக்காக இத்தனை ஆண்டுகள்
அமைதியாகத்தானே சென்று வந்தார்? அரசியல்வாதியாக ஆனதும் பில்டப் கொடுத்து மக்களை வரவழைக்கிறார்.
தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு இதுவரை ஷூட்டிங் சென்றபோது.. எந்த அறிவிப்பும் தராமல்
அமைதியாகத்தானே சென்று வந்தீர்கள்? இந்தமுறை முன்பே அறிவிக்க வேண்டிய அவசியமென்ன? ரசிகர்களைப்
பார்க்க விரும்பினால் காவல்துறை அனுமதி பெற்று
ரோட் ஷோ நடத்தலாமே? அரசியல் கட்சி தொடங்கியபின் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்து
ஒரு வார்த்தை கூட அரசியல் பேசலைன்னா எப்படி?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
ஒரு தடவை முடிவு எடுத்துட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்
என்ற விஜய் டயலாக்கை அவரது ரசிகர்கள் கடைபிடித்துக் காட்டியிருக்கிறார்கள். எது எப்படியோ,
சென்னையிலும் மதுரையிலும் கூடிய கூட்டம் அத்தனை கட்சிகளையும் அதிர வைத்திருக்கிறது.