News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அதிமுக கூட்டணியில் விஜய் சேரப்போவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. அவர் தனியே நின்று வாக்குகளைப் பிரிப்பார். அதோடு அவருடன் பெரிய கட்சிகள் யாரும் கூட்டணி சேர்வதாகவும் தெரியவில்லை. எனவே குட்டிக்குட்டி கட்சிகளுடன் இணைந்து மக்கள் நலக்கூட்டணி அமைக்கிறார். இது திமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.

இது குறித்து பேசும் பத்திரிகையாளர், ‘’இன்றைய சூழலில் தவெக இளையதலைமுறையினர் வாக்குகள் பெறுவதில் முன்னிலையில் இருந்தாலும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கட்சியை கொண்டு சேர்ப்பதில் பலவீனமாக உள்ளது. விவசாயிகள், அரசு ஊழியர்கள், நடுத்தர வர்க்கத்தினரிடம் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் தவெக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை.

அடுத்து விஜய் எந்த அளவுக்கு பிரச்சாரத்தில் களமாட போகிறார், என்னவெல்லாம் பேசப்போகிறார் என்பதை வைத்துத்தான் மக்களைத் தொட முடியும். ஆர்ப்பாட்டம்போல் 2-18 நிமிடம் பேசினாலும், பிரச்சாரத்தை தொடராமல் போனாலும் ஒன்றும் தேறாது. தவெகவிற்கு இருக்கும் இன்னொரு பலவீனம் தேர்தல் அனுபவம் உள்ளவர்கள் யாரும் இல்லலை. வேட்பாளர்கள் வெற்றிக்கு முக்கியம் அது மைனஸ், இதுவரை சின்னம் வாங்கவில்லை அது ஒரு மைனஸ்.

மாநிலம் முழுவதும் கட்சியை கொண்டுச்செல்ல கட்சி சார்பாக இளைஞர்கள் உள்ளனர் வழிநடத்த தளபதிகள் இல்லை. பணபலம் அதிகார பலத்தை எதிர்ப்பதும், பண ஆசை, பதவி ஆசையில் சிக்காமல் இருப்பதும் முக்கியம். 2 ஆண்டுகள் ஒரு முன்னேற்றத்தையும் தராத வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி இதுவரை கட்சிக்காக ஒரு கோஷத்தைக்கூட உருவாக்கவில்லை.

இரண்டு பெரிய கட்சிகளின் அதிகார பலத்தை முறியடிக்கும் எந்த வியூகமும் ஜான் ஆரோக்கியசாமியிடம் இல்லை. இப்போதுள்ள நிலையில் வாங்குகிற வாக்குகள் சில தொகுதிகளில் டெபாசிட்டை மீட்கலாம், தொகுதிகளை பெற்று தராது. இன்னொரு மக்கள் நலக்கூட்டணியாக மாறாமல் இருக்க தவெகவிடம் இருப்பது ரெண்டே ஆப்ஷன். ஒன்று கடுமையாக உழைப்பது. ரெண்டு கூட்டணிக்குள் செல்ல வேண்டும்’’ என்கிறார்கள்.

விஜய் என்ன முடிவு செய்வார்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link