News

கூட்டணியை கோட்டை விட்ட விஜய்… வேட்பாளர்கள் எங்கேப்பா..?

Follow Us

இன்று தாஜ் ஓட்டலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைத்து உறுதி மொழி எடுக்க வைத்தார்.

அப்போது வழக்கம்போல், ‘இரண்டு பேருக்கு இடையில்தான் கூட்டணி. நமக்கும் ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் போட்டி. உடைந்து போன கூட்டணிதான் திமுக கூட்டணி. இந்த தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி.’’ என்று சொன்னார்.

அதோடு, போதையில்லா தமிழகம், 29 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு மாதம் 4000 ரூபாய், இளைஞர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 20 லட்சம் வரை பிணையில்லா கல்விக்கடன், படித்தவர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ஊக்கத்தொகை, இளைஞர்கள் தொழில் தொடங்க 25 லட்சம் வரை கடன் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். இன்று விஜய் வெளிட்ட முக்கியமான சில வேட்பாளர்கள்.

தியாகராயர் நகர் – புஸ்ஸி ஆனந்த்

மயிலாப்பூர் – வெங்கட்ராமன்

வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜுனா

கோபி – செங்கோட்டையன்

திருப்பரங்குன்றம் – நிர்மல் குமார்

திருச்செங்கோடு – அருண்ராஜ்

குமாரபாளையம் – விஜயலட்சுமி

சைதாப்பேட்டை – அருள்பிரகாசம்

எழும்பூர் – ராஜ் மோகன்

லால்குடி – கு.ப.கிருஷ்ணன்

திருப்பூர் வடக்கு – சத்தியபாமா

ஆயிரம் விளக்கு – ஜே.சி.டி.பிரபாகர்

கொளத்தூர் – வி.எஸ்.பாபு

விஜய் இரண்டு இடங்களில் அதாவது பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிக்கிறார். இதில் என்னவெல்லாம் பஞ்சாயத்துகள் வருகிறது என்று பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link