Share via:
செயற்குழுக் கூட்டத்தில் பரந்தூர் விமானநிலையத்துக்கு விஜய் கடும்
எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து எந்த அரசியல்வாதியும் கருத்து சொல்லாத நிலையில்
திருமாவளவன் மட்டுமே வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து திருமாவுக்கு விஜய் போனில்
நன்றி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. திமுகவில் நெருக்கடி அதிகரிக்கும் நிலையில் விஜய்யுடன்
கை கோர்ப்பது உறுதி என்கிறார்கள்.
இது குறித்து பேசும் விடுதலை சிறுத்தைகளின் ஆதரவாளர்கள், ‘’கூட்டணிக்கு
எதிர்நிலையில் அரசியல் செய்பவர்கள் என்ன பேசினாலும் அதை வரவேற்கவே கூடாது என்ற நிலையில்
தான் இன்றைய அரசியல் இருக்கிறது. திமுகவை யார் திட்டினாலும் அவர்களை கூட்டணிக் கட்சியினரும்
திட்ட வேண்டும் என்பதே எழுதப்படாத அசைன்மென்ட்.
ஆனால் அந்த வரையறைகளுக்கு அப்பாற்பட்டவர் திருமாவளவன். அதிமுக ஆட்சிக்காலத்தில் காவிரி நீருக்காக அதிமுக
அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டிய பொழுது திமுக கூட்டணி இருந்தாலும் அதை வரவேற்று
பேசினார். ராமதாஸ் அவர்கள் கொள்கை மற்றும்
அரசியல் எதிரியாக இருந்த போதிலும் சமீபத்தில் அண்ணன் திருமாவளவன் அவர்கள் வழங்கிய பேட்டியில்
ராமதாஸ் அவர்களின் 90 கால செயல்பாடுகளை புகழ்ந்து பேசி இருப்பார். அந்த வகையில், பரந்தூர்
விமான நிலையம் விவகாரத்தில் விஜய்யால் வெற்றி பெற்றுத் தர முடியும் என்றால் அதை வரவேற்கிறேன்
என்று கூறி இருக்கின்றார்.
இதற்குப் பெயர்தான் மக்களுக்கான அரசியல். அரசியல்வாதிகள் வேறு
கொள்கைவாதிகள் வேறு. அந்த வகையில் திருமாவளவன் கொள்கைவாதி. இந்த வரவேற்பை திருமாவிடம்
இருந்து விஜய் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, திருமாவளவனை போனில் அழைத்துப் பேசி நன்றி
தெரிவித்து இருக்கிறார். திமுக கூட்டணியில் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை
என்றால் திசை மாறுவதற்கு வாய்ப்பு உண்டு’’ என்கிறார்கள்.
விஜய் கட்சியினரோ, ‘’எங்கள் கட்சியின் முதல் கூட்டணியாக விடுதலைச்
சிறுத்தைகள் இருக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம். விரைவில் நல்ல செய்தி வரும்.
விஜய் பேசியது உண்மை’’ என்கிறார்கள்.
திமுக கூட்டணியில் ஓட்டை விழுகிறது.