Share via:

விஜய் கட்சி தொடங்கி ஓர் ஆண்டைக் கடந்துவிட்டது. இன்னும் இரண்டு
மாதத்தில் முழு நேர அரசியல்வாதியாக விஜய் மாறிவிடுவார் என்று கூறப்படும் நேரத்தில்,
அவரை உயர்த்திப் பிடிக்கும் தேர்தல் வியூக வேலைகள் தொடங்கிவிட்டன. சி வோட்டர் கருத்துக்கணிப்பு
விஜய்க்கு ஆதரவாக வெளியிடப்பட்டது என்று புகார் கூறப்பட்டது.
இந்த நிலையில் இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மிகவும் சக்திவாய்ந்த
நூறு நபர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து இருவர்
மட்டுமே இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் தவெக
தலைவர் விஜய் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். இப்போது இதையும் நேரேட்டிவ் ஸ்டோரி என்று
எதிர்க் கட்சிகள் சொல்லி வருகிறார்கள்.
அரசியலுக்கு வந்து ஒரு வருடமாச்சே, த.வெ.க. என்ன சாதித்தது என்ற
கேள்விக்கு அவர்கள் சொல்லும் பதில் என்ன தெரியுமா..?
திருமாவை மேடை தோறும் விஜய் விஜய் என முழங்க செய்திருக்கிறது.
திருமாவை தினமும் நான் திமுக கூட்டணியில்தான் இருக்கேன் என இம்போசிஷன் எழுத வைத்தது.
சீமானை பாஜகவின் நட்பு சக்தியாக மாற்றியது.
தமிழகத்திற்கு புதிய அப்பாவை உருவாக்கியது.
வேகமாக முன்னேறிய உதயநிதியை ஹால்ட் அடிக்கச்செய்திருக்கிறது. அதிமுகவை பாஜகவை நோக்கி
நகர செய்தது. அதன் விளைவாக அண்ணாமலை தலைவர் பதவி கேள்விக்குறியாக்கி உள்ளது.
ஒரு வருடத்திற்கே முன்பே கூட்டணி கணக்குகளை அனைத்து கட்சிகளையும்
தொடங்கவைத்துள்ளது கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுகவின் முழு நேர எடுபிடிகளாக மாற்றியுள்ளது
காங்கிரஸ் என்னும் கட்சியை திமுகவின் அடிமையாக மாற்றியுள்ளது. தேமுதிக பாமகவை எங்கு
செல்ல வேண்டும் என்று தெரியாமல் திகைக்கவைத்துள்ளது திமுகவை நம்பிய இஸ்லாமியர்களை தற்போது
சிந்திக்க வைத்திருக்கிறது’’ என்று அள்ளி விடுகிறார்கள்.
மக்களுக்கு என்ன செஞ்சீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா.