Share via:
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், இன்று (ஜூலை 3ம்தேதி) நடைபெற்ற விஜய் விருதுகள் வழங்கும் விழா 2.0வில் கலந்து கொண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய மாணவ, மாணவிகளுக்கு தொகுதி வாரியாக சால்வை அணிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கடந்த ஜூன் 28ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய விஜய், போதைப் பொருட்கள் வேண்டாமென்று மாணவ, மாணவிகளை உறுதிமொழி எடுக்க வைத்தார். அதே போன்று தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை என்று அரசியல் குறித்த விழிப்புணர்வை மாணவ, மாணவிகள் மனதில் விதைத்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விழாவில், நீட் தேர்வு குறித்து முதல் முறையாக மனம் திறந்து மிகவும் தைரியமாக பேசியுள்ளார் விஜய். அவர் பேசும்போது, தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவை கிடையாது. நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வாக இருக்கும். நீட் ரத்து கோரி தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை தான் மனப்பூர்வமாக வரவேற்பதாக ஆதரவு தெரிவித்தார்.
மேலும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடப்பது குறித்து கடந்த சில நாட்களாக நாம் பார்த்து வருகிறோம். இது மலைகிராமங்களில் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆபத்தாக அமையும். எனவே ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்.
நான் பேசினால் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிடாது. செய்யவும் விடமாட்டார்கள் என்று பேசிய போது அரங்கமே அதிர்ந்தது.
இந்நிலையில் விஜய்யின் நீட் தேர்வு எதிர்ப்பு பேச்சுக்கு பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்து பேசினார்.
நிலைமை இப்படியிருக்க தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விஜய்யின் நீட் எதிர்ப்பு பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதே போல் அ.தி.மு.க.வின் நிலைப்பாடும் இதுதான் என்று அ.தி.மு.க. முன்னாள் முமைச்சர் ஜெயக்குமாரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.