Share via:
மகளிர் தினத்துக்குப் போராடியவர்களை கைது செய்தவர்களை எதிர்த்து
அறிக்கை விட்ட நடிகர் விஜய், அடுத்து நேரடியாக பிரமாண்ட போராட்டம் நடத்தப்போவதாக செய்திகள்
வந்துள்ளன. எந்த அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளாத மீனவர் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்க
களம் இறங்குகிறாராம் விஜய். அதேநேரம், இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்த அண்ணாமலை டீம்
தீவிர முயற்சி எடுத்துவருகிறது.
காங்கிரஸ் காலத்திலிருந்து பா.ஜக. காலம் வரை யார் ஆட்சி செய்தாலும்
தமிழக மீனவர்கள் பிரச்னை தீர்வதே இல்லை. மத்திய அரசும், மாநில அரசும் ஒருவரையொருவர்
குற்றம் சொல்வதோடு பிரச்னையை முடித்துக்கொள்கிரார்கள். ஆகவே, மீனவர்களுக்கு களம் இறங்க
விஜய் தயாராகி வருகிறார்.
வடசென்னை கடந்து ஆந்திரா எல்லைப்பகுதி முதல் கன்னியாகுமரி முக்கடல்
சங்கமம் வரை தமிழ்நாட்டில் சுமார் 906 கிமீ தூரம் கடற்கரை பகுதிகள் உள்ளன. இதில் சென்னை
திருவள்ளூர் தொடங்கி நாகை,இராமநாதபுரம் தூத்துக்குடி ,கன்னியாகுமரி மாவட்டங்கள்வரை
14 மாவட்டங்கள் கடற்கரை சார்ந்த பகுதிகளைப் பெற்றவை! ஒரு கோடிக்கும் மேலான மக்கள் மீனவர்களை
சார்ந்து வாழ்கிறார்கள்.
எனவே, மீனவர்களைக்கான பலவேறு பிரச்சனைகளைக்கு உடனடி நிரந்தர நடவடிக்கைகள்
மாநில அரசு எடுக்கவும், இலங்கை கடற்படை தாக்குதல்களை நிறுத்திட மத்திய அரசினை வலியுறுத்தவும்
மீனவர்களை ஒருங்கிணைத்து கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தை முன்னின்று நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.
இதற்கான அரசு அனுமதி கோரி தவெக விண்ணப்பம் செய்திருக்கிறது.
இந்த நிலையில் இரண்டு நாடு சம்பந்தப்பட்ட பிரச்னை இது, மத்திய
அரசை சீண்டும் வகையில் விஜய் பேசினால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்
என்று அண்ணாமலை டீம் எச்சரிக்கை செய்துவருகிறது. இதனை விஜய் மதிப்பாரா அல்லது கண்டுகொள்ளாமல்
கண்டனம் தெரிவிப்பாரா என்பதை விரைவில் பார்த்துவிடலாம்.