Share via:

இன்னும் இரண்டு மாதங்களில் அரசியல் சூறாவளி, தேர்தல் சுற்றுப்
பயணம் என்றெல்லாம் விஜய் வருகையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், பூத் லெவல்
ஏஜெண்ட் கருத்தரங்கள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இது குறித்து விஜய் ரசிகர்கள், ‘’நாளையும் நாளை மறுநாளும் கோவையில்
தவெக பூத் லெவல் ஏஜண்டுகள் கருத்தரங்கம் நடத்துகிறோம். பொதுவாக 2 லட்சம் வாக்காளர்கள்
இருக்கும் ஒரு சட்டசபை தொகுதியில் 200 வாக்குசாவடிகள் (Booths) இருக்கும். (1000 பேருக்கு
ஒரு Booth) BLA1,BLA2 பாரங்களை பூர்த்தி செய்து ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியும்
ஒரு பூத்லெவல் ஏஜண்டு ஒரு பூத்திற்கு நியமனம் செய்யலாம்.
பெரும்பாலும் நியமனம் செய்யப்பட்ட கட்சி பூத் லெவல் ஏஜெண்ட் தனக்கு
உதவியாக ஒரு துணை முகவரும் 10 உறுப்பினர்களையும் சேர்த்து 12,13 பேர் கொண்ட பூத் கமிட்டி
அமைத்து செயல்படுவார்கள். தங்களது பூத்தில் உள்ள 1000 பேர் விபரம் அடங்கிய வாக்காளர்கள்
பட்டியலை முதலில் பெற்றுக்கொள்வார்கள் பிறகு பூத்தில் உள்ள வாக்காளர்களை வீதி வீதியாக
வீடு வீடாக சென்று சந்திப்பார்கள்.
சிலர் லிஸ்டில் இருப்பவர்கள் வேறு ஊருக்கு சென்றிருக்கலாம். மரணம்
அடைந்நிருக்கலாம். அவர்கள் பெயரினை அலுவலகத்தில் கூறி நீக்கிவிடுவார்கள். அதே போல வீட்டில்
இருப்பவர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் அவரை புதிய வாக்காளராக சேர்த்துவிடுவர்!
மேலும் இந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது பூத் மக்கள் ஆயிரம் பேரிடம்
தினசரி தொடர்பில் இருந்து அவர்களிடம் தவெகவின் கொள்கைகள் தீர்மானங்கள் ,மக்கள் நல திட்டங்கள்
பற்றி அடிக்கடி வலியுறுத்தி பேசுவார்கள்.
தவெக பூத் கமிட்டி உறுப்பினர்களின் சிறப்பு பணிகள்: பூத் வாக்காளர்கள்
தங்கள் பகுதி குடிநீர் மற்றும் கழிவு நீர், மின்வெட்டு போன்றவற்றில் உள்ள பிரச்சனைகளை
, இவற்றை புகார்களாக பூத்கமிட்டியிடம் வழங்கி coordinate செய்து , சீர் செய்திட முறையிடலாம்.
குழம்தைகள் பள்ளி அட்மிஷன் மற்றும் தற்காலிக வேலைவாய்ப்புக்கள் பற்றி விபரங்கள் பெற்றிடலாம்!
தவெக பூத் கமிட்டி உறுப்பினர்கள் தங்களது பூத் வாக்காளர்களின் வீட்டு பிறப்பு இறப்பு
நிகழ்வுகள் மற்றும் சடங்கு திருமண விழாக்களில் நண்பர்களாக கலந்து கொண்டு தங்களால் முடிந்த
உதவிகளை செய்யலாம்!
ஒருமுறை தவெக பூத் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் தனது
வாழ்நாள் முழுவதும் தனது வாக்குசாவடியின் ஆயிரம் வாக்காளர்களுடன் ஒன்றாகக் கலந்து தொடர்ந்து
அவர்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவர்! ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 20% அதாவது
200 பேர்கள் எந்தக்கட்சிக்கு வாக்களிப்பது என முடிவு செய்திடாமலேயே குழப்பத்தில் இருப்பார்கள்
அத்தகைய வாக்காளர்கலை தவெக பூத்கமிட்டியினர் தொடர்ந்து சந்தித்து அவர்களையும் தங்கள்
கட்சிக்கு வாக்களிக்க செய்வதை சவாலாக ஏற்று செயல்பட வேண்டும்’’ என்று சொல்லித்தர இருக்கிறார்களாம்.
விஜய் ரசிகர்களுக்கு ரொம்ப குஷி
