News

கூட்டணியை கோட்டை விட்ட விஜய்… வேட்பாளர்கள் எங்கேப்பா..?

Follow Us

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்று தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்டார்கள். அதாவது, கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்பதுதான் அர்த்தம்.

இதுகுறித்து ஆதவ் அர்ஜூனா, ‘’நீங்க 90 நான் 90, நீங்க இரண்டரை ஆண்டு முதலமைச்சர் நாங்கள் இரண்டரை ஆண்டு முதலமைச்சர் என ஆஃபர் கொடுத்தார்கள். எனக்கு ஆஃபர் தேவை இல்லை, தமிழக மக்களின் உண்மையான நம்பிக்கையை மதச்சார்பற்ற சமூக நீதி அரசை தமிழக வெற்றிக்கழகம் உருவாக்கும் என்று விஜய் சொன்னார். அதனால் தேர்தலில் தனித்து நிற்கிறோம்’’ என்று அறிவித்துவிட்டார்கள்.

விஜய்யுடன் நெருக்கமாக இருக்கும் ஜான் ஆரோக்கியராஜ், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் என ஒவ்வொருவரும் இப்போது முழு வீச்சில் வேட்பாளர் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். முதலில் 10 கோடி ரூபாய் இருப்பவர்கள் மட்டுமே வேட்பாளர்கள் என்று அறிவிக்கப்பட்டதில் பத்துப் பேர் கூட தேறவில்லை. எனவே இப்போது 3 கோடி ரூபாய் இருந்தால் போதும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் 100 தொகுதிக்கு மேல் நம்பிக்கையான வேட்பாளர்கள் யாருமில்லை.

அதேநேரம், விஜய் கட்சியில் வேட்பாளர் சீட் வாங்கித்தருகிறேன் என்று சென்னை முக்கிய நிர்வாகிகள் சிலர் கண்ணில் தென்படும் ரசிகர்களிடம் எல்லாம் வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். 5 லட்சம் அட்வான்ஸ் கொடுங்கள் போதும், சீட் கிடைத்தவுடன் மீதம் கொடுக்கலாம் என்ற பேச்சில் நம்பி பலரும் பணம் கொடுத்துவருகிறார்கள்.

அதோஉ முக்கிய தலைவர்கள் ஆளுக்கு 20 தொகுதிகள் என்று பிரித்துக்கொண்டு, அதில் வசூல் வேட்டை நடத்துகிறார்கள்.  வேட்புமனுத் தாக்கல் தொடங்க இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில், வேட்பாளர்களையே இன்னும் முடிவு செய்யவில்லை என்றால், எப்போது பிரச்சாரத்துக்கு போவது, எப்போது மக்களை சந்திப்பது என்று செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன், போன்ற மூத்தவர்கள் தவியாய் தவிக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link