Share via:
பனையூர் பங்களாவில் இருந்து பாலிடிக்ஸ் செய்துவருகிறார் என்று
விஜய் மீது விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில், பரந்தூருக்கு வந்து ஒரு பரபரப்புக் கிளப்பினார்.
இதையடுத்து இன்று மாவட்ட நிர்வாகிகளை நேரடியாக சந்தித்துப் பேசுகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு முறைப்படி
நடைபெற்றுள்ளது. இப்படி தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் விஜயிடம் கொடுக்கப்பட்டது.
அதில் உள்ளவர்களை பகுதி பகுதியாக சந்தித்து விஜய் நேர்காணல் செய்து அதன் பிறகு நிர்வாகிகள்
அறிவிக்கப்பட இருக்கிறார்கள். அதன்படி இன்று அரியலூர், சென்னை, செங்கல்பட்டு, கோயமுத்தூர்,
கடலூர், தருமபுரி, திண்டுகல், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளை விஜய் நேர்காணல் செய்கிறார்.
இந்த நிர்வாகிகளிடம் முதலில் அவரால் கட்சிக்கு எவ்வளவு செலவு செய்ய
முடியும், எத்தனை நேரம் உழைக்க முடியும், அவர் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்று
கேட்கிறார். இதையடுத்து தனித்து நின்றால் எத்தனை சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும், கூட்டணிக்கு
நாம் செல்ல வேண்டுமா, எது சரியான கூட்டணி என்றெல்லாம் கேட்கிறார்.
இது குறித்துப் பேசும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ‘’தமிழக
மக்களின் மனநிலை இந்த ஆட்சிக்கு எதிராக இருக்கிறது. மாற்றம் தேவை என்பதில் மக்கள் உறுதியாக
உள்ளனர். இன்றைய நிலையில் வலுவான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. ஆனால், அந்த கட்சியில்
இளைஞர்களை இழுப்பதற்கு யுக்திகள் இல்லை, ஆட்களும் இல்லை. அதனால் அதிமுகவுடன் தமிழக
வெற்றிக் கழகம் விஜய் கட்சி, தேதிமுக,, பா.ம.க இணைந்து செயல்பட்டால் மக்களுக்கு நம்பிக்கை
வரும்.
எங்கள் தலைவர் தனியே நின்றால் நிச்சயம் 10 முதல் 15% வாக்குகள்
பெற முடியும் என்றாலும் அது வெற்றிக்கு உதவாது. மேலும் வாக்குகளைப் பிரித்து தி.மு;க.
வெற்றி பெறவே செய்யும். ஆகவே, தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவது முக்கியமான குறிக்கோளாக
இருக்க வேண்டும். ஈகோ இல்லாமல் எடப்பாடி பழனிசாமியுடன் பேசி விஜயகாந்த் கட்சி வாங்கிய
சீட் வாங்குவதற்கு முன்வர வேண்டும். அதுவே, வெற்றிக்கு சரியான வழியாக இருக்கும். இந்த
தேர்தலில் விட்டு அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தால் அரசியலே மாறிவிடும்.
ஆகவே, கூட்டணி வைக்க வேண்டும் அதுவும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்கவேண்டும்’
என்கிறார்கள்.
விஜய் என்ன முடிவு செய்வார் என்று பார்க்கலாம்,