Share via:
விஜய் நாளை கரூரில் மக்களை சந்திக்க இருக்கிறார். வழக்கம்போல்
பெருந்திரளான கூட்டம் கூடும் என்பதால் அவருடைய மக்கள் சந்திப்பு இடத்தை முடிவு செய்வதில்
எக்கச்சக்க சிக்கல்கள் இருக்கின்றன.
இதுவரை விஜய் பரப்புரை செய்த திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர்
ஆகிய இடங்களில் காவல்துறை முறையான பாதுகாப்பை வழங்கவில்லை. எனவே, முன்கூட்டியே இடத்தை
முடிவு செய்ய வேண்டும் என்பதையும் விஜயின் பரப்புரை நடைபெறும் இடங்களில் போதிய காவர்களை
கொண்டு முறையான பாதுகாப்பு வழங்கக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்வதற்கு ஆலோசனை செய்துவருகிறார்கள்.
விஜய்க்கு கிடைக்கும் ஆதரவு சீமான் தரப்பை ரொம்பவும் தடுமாற வைத்திருக்கிறது.
வரும் தேர்தலில் விஜய் எல்லாம் நாதகவை முந்தி விட முடியுமென்றால் அதற்கு பிறகு இந்த
மண்ணில் நின்று அரசியல் பேச மக்களுக்காய் ஓடி நிற்க நமக்கு சத்தியமாக எந்த தேவையோ அக்கறையோ
நாம் தமிழர் கட்சிக்கு இருக்கப் போவதில்லை.
உயிர் நேயம் பேசி உலக அரசியல் அறிவியல் பேசி இனம் மொழி பேசி காடு
அருவி பேசி ஆறு குளம் பேசி மண் மலை மரம் பேசி இழந்தவை இருப்பவை பேசி கொள்கை கோட்பாடுகள்
பேசி அரசியல் அதிகாரம் இன விடுதலை பேசி அதிகாரத் தேவை எதிர்கால திட்டம் என எல்லாம்
பேசிய சீமானுக்கு இந்த தேர்தலில் வெற்றி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. விஜய்யைத்
தாண்டி ஆதரவு கிடைக்க வேண்டும்.
கூத்தாடி விஜய்க்கு அதிக மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிட்டால்
சீமான் இனி தேர்தல் அரசியலில் இருந்து விலகிவிடலாம் என்று அவரது கட்சியினரே சோர்வடைந்துள்ளனர்.
பரிதாபம்தான்.