Share via:
அனைத்து கட்சிகளும் தேர்தல்
பணிகளில் பிசியாக இருக்கும் சூழலில் விஜய் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில்,
விஜய் தேர்தல் பிரசாரத் திட்டம் வெளியாகியுள்ளது.
அதன்படி வரும் 28 ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பெரம்பூர் எம்.கே.பி
நகரிலிருந்து பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் விஜய். அடுத்தடுத்து கொளத்தூர் வில்லிவாக்கம் அண்ணாநகர்
விருகம்பாக்கம் தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சார உரையாற்றுகிறார் விஜய் என்கிறார்கள்.
இதெல்லாம் சாத்தியமாகுமா என்று விஜய் கட்சியினரே ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.
இந்நிலையில் விஜய் ரசிகைகளை தவறாகப் பேசியதற்காக
பொன்ராஜை தவெகவினர் பிரித்து மேய்கிரார்கள். இது குறித்து தவெகவினர், ‘’தமிழகப் பெண்களுக்கு
எதிராக அறிவாலயத்தின் கைக்கூலி பொன்ராஜை ஏவிவிட்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே,
உங்களுக்கு வெட்கமாக இல்லையா? பெருமதிப்பிற்குரிய தமிழகப் பெண்களை ‘விபச்சாரிகள்’ என்று
கொச்சைப்படுத்துவது, பெண்களை இழிவுபடுத்தும் அருவருக்கத்தக்கச் செயலும், அநாகரீக அரசியலின்
உச்சமுமாகும்.
இது பேச்சுரிமை அல்ல—தேர்தல் தோல்வி பயத்தில்
நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு முதலமைச்சரின் தூண்டுதலின் பேரில், தமிழகப் பெண் வாக்காளர்களைக்
கண்ணியத்துடன் எதிர்கொள்ளத் திராணியின்றி, நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள்
மீது வீசப்பட்ட அருவருக்கத்தக்க அவதூறு. பதவி விலகப்போகும் ஒரு முதலமைச்சரின் பயம்
இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது
தமிழகப் பெண்களுக்குத் தேவை மரியாதை, உங்களது
அருவருப்பான வசவுகளல்ல. மாற்றுக் கருத்து கொண்ட பெண்களை ‘விபச்சாரி’ என்று பொதுவெளியில்
சாடியிருக்கும் பொன்ராஜ் என்ற இழிபிறவியின் செயலுக்கு உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்!
விபச்சாரிகள்” என்று தமிழகத்தின் மரியாதைக்குரிய
பெண்களை அழைப்பது, உன் மனநிலையின் கீழ்த்தரத்தை வெளிப்படுத்துகிறது…. இப்படி பேசுபவர்களுக்கு
சமூகத்தில் எந்த மரியாதையும் கிடைக்கக் கூடாது. தமிழகப் பெண்கள் பலம், பெருமை, கண்ணியம்
அதை களங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை! உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும், பெண்களை மட்டுமல்ல,
முழு சமூகத்தையே அவமதிக்கிறது. இதற்கு உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று கொதிக்கிறார்கள்.
