Share via:
பனையூரை விட்டு வெளியே வராமல் முடங்கிக்கிடந்த விஜய் திடீரென வெளியே
வந்திருக்கிறார். அதாவது, தமிழ்நாட்டுப் பெண்களை விபச்சாரி என்று கூறிய பொன்ராஜ் மீது
நடவடிக்கை எடுக்க கோரி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு
சென்று புகார் அளித்துள்ளார்.
அதோடு, திமுகவின் தூண்டுதல் பேரில்தான் பொன்ராஜ் இப்படி பேசுகிறார்
என்பதையும் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் அனைவரும்
பொன்ராஜ் மீது வன்மம் கக்கி வருகிறார்கள்.
இதற்கு திமுகவினர், ‘’பொன்ராஜ் யார்? அப்துல் கலாமின் முன்னாள்
உதவியாளர். அது மட்டும்தான் அவரது அடையாளம். அப்படிதான் டிவியில் சொல்லுவார்கள். இன்னும்
சொல்லப்போனால் அப்துல் கலாம் விஷனரி பார்ட்டி என்று கட்சி வைத்திருந்தார். பின்பு மக்கள்
நீதி மையத்தில் இருந்தார். பிறகு இப்போது தொலைக்காட்சிகளில் வரும் எண்ணற்ற சமூக ஆர்வலர்களில்
ஒருவராக இருக்கிறார். ஆனால் பனையூர் பொணமே, பொன்ராஜை நீயும் உன் பின்னாடியே காவடி தூக்கும்
ஊடகப் பொறுக்கிகளும் திமுக ஆதரவாளர் என அடையாளப்படுத்துகிறீர்களே உங்களுக்கு வெட்கம்
மானம் சூடு சொரணை இருக்கிறதா?
யாரோ ஒரு பெண்ணை நோக்கி அவர் சொன்னதை வைத்து, “அய்யோ எங்க கைய
புடிச்சு இழுத்துட்டான்” என்ற வகையில் பொய் சொல்லிக்கொண்டு ஊர் ஊராக ஒப்பாரி வைத்து
அலைவது அசிங்கமாக இல்லையா?
ஒரு கட்சியில் அதிகாரப்பூர்வ பொறுப்பில் இருப்பவர்கள் டிவிகளில்
பேசும் பேச்சுகளைத் தவிர வேறு எவர் பேச்சுக்கும் ஒரு கட்சி பொறுப்பாகாது என்பதை, ஒரு
கட்சியை வைத்திருக்கும் உனக்கு உன் அல்லக்கைகள் சொல்லிக் கொடுக்கவில்லையா?’’ என்று
கேள்வி எழுப்புகிறார்கள்.
அதெல்லாம் சரி, முதலில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுங்கள், பிரசாரத்துக்கு
வாருங்கள் என்று மக்கள் அழைக்கிறார்கள். கமான் விஜய்.
