Share via:
கரூரில் மயங்கி விழுந்ததை எல்லாம் கண்டுகொள்ளாமல் பேசிய விஜய்யிடம்
இப்போது திடீர் மாற்றம் வந்திருக்கிறது. இன்று திருச்சி ரோடு ஷோவில், தன்னை பின் தொடர்ந்த
ஒரு தம்பதி கீழே விழுந்ததைக் கண்டதும் வேனில் இருந்து கீழே இறங்கினார்.
விஜய் பாதுகாப்புப் படை மற்றும் காவலர்கள் சுற்றி நின்று பாதுகாப்பு
கொடுத்த நிலையில், அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதியானதும் மீண்டும் வேனில்
ஏறி பயணத்தைத் தொடங்கிவிட்டார்.
தலைவர் கண்ணு முன்னாடி கீழே விழுவதைப் பார்த்ததும் பதறிவிட்டார்,
துடிச்சிட்டார். இனிமே அவர்தான் முதல்வர் என்று அவரது ரசிகர்கள் புல்லரிப்பாகிறார்கள்.
இன்று திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு ரோடுஷோ மற்றும்
பரப்புரையில் ஈடுபட இருக்கிறார். இந்த நிலையில் தங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பதாக
மீண்டும் குற்றச்சாட்டு வைத்து கடிதம் எழுதியிருக்கிறார்.
தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்
மீண்டும் எழுதியிருக்கும் கடிதத்தில், “நடுநிலையோடு செயல்படாத காவல்துறை அதிகாரிகளை
மாற்ற வேண்டும். தவெக பிரச்சாரத்திற்கு காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் பாதுகாப்பை மேம்படுத்த
வேண்டும். என்னுடைய முந்தைய புகார் மீது நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துவது கவலை அளிக்கிறது”
என்று கூறியிருக்கிறார்.
இன்னைக்கு என்னவெல்லாம் சம்பவம் நடக்கப்போகுதோ..?
