Share via:
நீண்ட காலமாக சங்கீதாவிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார் விஜய்.
இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு, விஜய் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்கும்
நேரத்தில் மட்டும் விவாகரத்து கேட்வது ஏன்? இதற்குப் பின்னே இருப்பது யார் என்று பல்வேறு
கேள்விகள் எழுகின்றன.
சமீபத்தில் நயினார் நாகேந்திரன், ‘முதலில் த்ரிஷாவிடம் இருந்து
விஜய் வெளியே வரவேண்டும்’ என்று கூறியிருந்தது
பெரும் சர்ச்சையானது. இதற்கு த்ரிஷா பக்கமிருந்து எதிர்ப்பு வந்தது.
இந்நிலையில் பாஜகவினர், ‘’நடிகர் விஜய் நல்ல அரசியல் தலைவராக உருவாக
வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நயினார் நாகேந்திரன், “பாவம், விஜய் அனுபவமே இல்லாமல்
இருக்கிறார். முதலில் அவர் வீட்டில் இருந்து வெளியே வரட்டும். திரிஷாவிடம் இருந்து
வெளியே வரட்டும். குடும்பத்தோடு நல்ல உறவு வைக்க வேண்டும் என்று, மூத்த சகோதரனாக, உள்நோக்கமின்றி ஆலோசனை சொன்னார்.
அரசியல் சுயநலத்துடன் விஜய் செயல்படக் கூடாது, தொண்டர்களை, கட்சியை
அடமானம் வைக்க கூடாது, கட்சியினரும், தொண்டர்களும், தமிழக மக்களும் துன்பத்தில் சிக்கித்
தவிக்கும் போது, தான் மட்டும் மகிழ்ச்சியில் திளைத்து, “டைம் பாஸ்” அரசியல்
செய்யக்கூடாது, தன்னிலை மறந்து தமிழக மக்களின் நலத்துக்கு எதிராக, லாட்டரி பேர ஆதாயத்திற்காக,
சூழ்ச்சி அரசியல் செய்யக்கூடாது, நடிகர் விஜய்
எதற்கும், யாரிடமும் மயங்கி விடக்கூடாது என்பதை, ஒரு சகோதரனாக நயினார் நாகேந்திரன்
வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும், நடிகர் விஜய் தனது குடும்பத்துடன் எந்தவிதப் புகைப்படமும்
வெளியிடுவது கிடையாது. அதே சமயத்தில் அந்தக் குறிப்பிட்ட நடிகையுடன் பல்வேறு புகைப்படங்களில்
இருப்பதை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறார். இருவரும் லிப்டில் இருக்கும் புகைப்படம்,
நடிகையின் வீட்டில் நாயைக் கொஞ்சுவது போன்ற புகைப்படம், பிரபல நடிகையின் திருமணத்திற்குத்
தனி விமானத்தில் கோவா சென்றது தொடர்பான புகைப்படம் போன்றவற்றை வெளியிட்டு வந்தார்.
இதில், நடிகர் விஜய்க்கு வருத்தம் இருந்தால், இது குறித்து அவர்
கருத்துத் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசியலில் அவதூறு பிரச்சாரங்கள் செய்பவர்களுக்கு
மத்தியில், அன்பு சகோதரனாக, குடும்பத்திற்கும் கட்சியினருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
உங்களை நம்பியுள்ள தொண்டர்களை, கட்சியினரை, ரசிகர்களை, சுயநல அரசியலுக்காக ஏமாற்ற வேண்டாம்
இன்று அவரை விரும்பும் அனைவருமே சிந்தித்தனர்.
தமிழக மக்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ளுங்கள், உண்மைகளைப் புரிந்து
கொள்ளுங்கள் என்று, நல்லெண்ணத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுரை
கூறியிருப்பதைத் திசை திருப்பி, திமுக பெண் எம்பிக்கள், திமுக ஆதரவுக் கட்சிகள், ஊடகங்கள் உள்நோக்கத்துடன் கொச்சைப்படுத்தி இருந்தன.
த்ரிஷா நடிகர் விஜய் இருவரின் நட்பை பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன்
கொச்சைப்படுத்தவில்லை. நண்பர்களிடம் நேரம்
செலவிடுவதை விட்டு குடும்பத்திற்கு மக்களுக்கும் நேரம் செலவிடுங்கள் என்று மட்டுமே
அர்த்தம் வரும் தொனியில் அவர் பேசினார்…’’ என்று சங்கீதா விவாகரத்து மனு விவகாரத்தைக்
கொண்டாடுகிறார்கள்.
அதேநேரம் விஜய் கட்சியினரோ, ‘’ஏற்கெனவே சங்கீதாவுக்கும் திமுக
குடும்பத்துக்கும் நெருங்கிய சொந்தம் உண்டு. அதனால் தேர்தல் நேரத்தில் விஜய் இமேஜைக்
கெடுக்க சபரீசன் ஐடியா படி சங்கீதா செயல்படுகிறார்’’ என்று திமுகவினரை நோக்கி கொதிக்கிறார்கள்.
இந்த விவகாரத்தை யாருடைய தூண்டுதல் பேரில் சங்கீதா வெளியிட்டார்
என்பது முக்கியம் இல்லை. மனைவி, பிள்ளையை பாதுகாக்க முடியாத விஜய் எப்படி ரசிகர்களை
பாதுகாப்பார்..? கள்ளத் தொடர்பை எப்படி நியாயப்படுத்த முடியும்? டார்ச்சர் செய்ததை
எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
வி சப்போர்ட் விஜய் என்று ஹேஸ்டேக் கிரியேட் செய்து இந்த களங்கத்தை
துடைத்துவிடலாம் என்று நினைப்பது சரியா இருக்குமா.? யோசியுங்க விஜய்.
