Share via:

விஜய் சினிமாவுக்கு முழுக்கு, முழுநேர அரசியல் தலைவர்… தமிழக வெற்றி கழகத்துக்கு 2026 இலக்கு…
அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்ற குழப்பத்துக்கு விடை கொடுப்பது போன்று இன்று கட்சிப் பெயரை அறிவித்து அடுத்த கட்டத்துக்கு அடியெடுத்து வைத்திருக்கிறார் நடிகர் விஜய்.
விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தன்னால் இயன்ற வரை சேவைகளை செய்துவருறோம் என்றாலும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர தன்னார்வ அமைப்பினால் முடியாது என்பதாலே கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார்.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் தலைவராக இருக்கும் அரசியல் கட்சி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காகவே 25.1.2024 அன்று சென்னையில் நடந்த மாநில பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்தி முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதையும் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதையும் உறுதி செய்திருக்கும் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்துக்கு வழிவகுப்பதையே இலக்கு என்று கூறியிருக்கிறார்.
அரசியல் என்பது எனக்கு மற்றொரு தொழில் அல்லா, அது புனிதமான மக்கள் பணி. அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாமல் முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்காக அரசியலில் ஈடுபட உள்ளே. அதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் என்றும் கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் மாதிரி ஃபிலிம் காட்டிக்கொண்டு இருக்காமல் நேரடியாக களத்தில் குதித்திருக்கும் விஜய்யை வரவேற்போம்… கமான் விஜய்.

