Share via:
அறிக்கை மூலமாக மட்டுமே அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் நடிகர்
விஜய், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த
மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சந்தித்து பாராட்டுவதற்காக வெளியே வருகிறார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில்
அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி,
மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி,
தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்
பாராட்டப் பெறுகிறார்கள்.
இதையடுத்து மீதமுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 3.7.2024 அன்று
விஜய் நேரில் சந்தித்து பாராட்டுகிறார். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களுடைய
பெற்றோர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம்
செய்தியாளர் சந்திப்பும் உறுதிபடுத்தப்படவில்லை.
இந்த நிலையில் மதுரைக்கு வந்த விஜய் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்
புஸ்ஸி ஆனந்திற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. மதுரையில் முதல் மீட்டிங் ஏற்பாடு
செய்வதற்கு திட்டமிடவே வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், புஸ்ஸி ஆனந்த் இது குறித்து
எதுவும் உறுதிபடத் தெரிவிக்கவில்லை.
அதேநேரம், விஜய் என்ற பெயரைக் கூட சொல்லாத புஸ்ஸி ஆனந்த், ‘தலைவர்
பெயர் கொண்டவர்’ என்று விஜய் மன்ற உறுப்பினர்களை அழைத்தது கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு
வருகிறது. அடிமைகளில் பெரிய அடிமை என்று அழைக்கப்படுகிறார் புஸ்ஸி ஆனந்த்.
விஜய் வெளியே வரட்டும்.