Share via:

மதுரையில் நடிகர் விஜய்யை சந்திக்க முயன்ற இன்பராஜ் என்பவரை தடுத்து
நிறுத்திய விஜயின் பாதுகாப்பினர், அவரது தலையில் துப்பாக்கியை வைத்த சம்பவம் வைரலாக
மாறியிருக்கிறது. பொது இடத்தில் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்துவது குற்றம் என்பதால்
விஜய் பவுன்சர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீமான் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரத்தில் காவலாளி கைது செய்யப்பட்டு
பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதே பாணியில் எந்த நேரமும் விஜய்யின் பவுன்சர் கைது
செய்யப்படுவார் என்று தெரியவந்துள்ளது. ஏனென்றால் துப்பாக்கி என்பது தனிப்பட்ட பாதுகாப்புக்காகக்
கொடுக்கப்படுவது. விஜய் பாதுகாப்புக்கு ஆபத்து
அல்லது விஜய் உயிருக்கு நேரும் அபாயம் இருப்பது தெரியவந்தால் மட்டுமே துப்பாக்கியை
வெளியே எடுப்பது நியாயமாக கருதப்படும்.
துப்பாக்கி உரிமம் கொடுத்தாலும் சண்டையின்போது, பொது இடங்களில்
பயமுறுத்த பயன்படுத்த கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்படும். திருமணம், விழா போன்ற
சந்தோஷ நிகழ்ச்சிகளில் பயன்படுத்த கூடாது. அரசியல் அல்லது சமூக போராட்டங்களில் பயன்படுத்த
கூடாது. எனவே விஜய் பவுன்சர் துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்தியது ஒரு வகையில் குற்றமாகவே கருதப்படும்.
இதற்கு 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் கிடைப்பதற்கு வாய்ப்பு
உண்டு.
மதுரை விமான நிலையத்தில் விஜய் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும்
ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆகவே, கையில் துப்பாக்கி வைத்திருக்கத் தேவை இல்லை. இது
சட்டப்படி குற்றம் என்பதால் காவல் துறை கைது செய்வதற்கும், துப்பாக்கி உரிமத்தைப் பறிக்கவும்
வாய்ப்பு உண்ட். என்ன நடவடிக்கை என்பது விரைவில் தெரிந்துவிடும்.