Share via:
ஒவ்வொரு கட்சியினரும் லட்சக்கணக்கில் செலவு செய்து கருத்துக்கணிப்பு
வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் ஒரு வித்தியாசமான கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறார்.
அதில் 60 சீட் ஜெயித்து எதிர்க்கட்சித் தலைவராகிறார் என்பது உறுதி ஆகியிருக்கிறதாம்.
இது குறித்து பேசும் தவெக நிர்வாகி ஒருவர், ‘’கரூர் சம்பவத்திற்குப்
பிறகு தவெக இமேஜ் அடிவாங்கிவிட்டது. அதுவும் த்ரிஷாவுடன் விஜய் வெளியே வந்ததும் ஒட்டுமொத்தமாக
டேமேஜ் ஆகிவிட்டது. ஆனால், இன்னமும் விஜய் தன்னால் எளிதாக ஜெயிக்க முடியும் என்று நம்புகிறார்.
அதற்குக் காரணம் விஜய்யின் ஜோதிடர்.
விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராக இருக்கிறார் ராதன் பண்டிட். இவர்தான்
விஜய் ஜாதகத்தைப் பார்த்து, ’நிறைய நிறைய பிரச்னைகள் வருவது சகஜம். ஆனால், கடைசியில்
சினிமா க்ளைமாக்ஸ் போன்று நீங்களே ஜெயிப்பீர்கள். ஏனென்றால் உங்கள் கிரக அமைப்பு உச்சத்தில்
இருக்கிறது.
அதனால் சைரன் வைத்த காரில் அடுத்த மாதம் நீங்கள் செல்வதை யாராலும்
தடுக்க முடியாது. முதல்வர் ஆவதற்கு வாய்ப்பு உண்டு அப்படியில்லை என்றாலும் 60 சீட்டுகளுக்கு
மேல் ஜெயித்து எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பு கண்டிப்பாக உண்டு. எனவே, யார் சொவதையும்
கேட்டு கூட்டணி வைக்க வேண்டாம்.
நீங்கள் யாருடன் கூட்டணிக்குப் போகிறீர்களோ, அவர்களுடைய ஜாதகம்
உங்கள் கிரக அமைப்பை வீணடித்துவிடலாம். எனவே, தனித்து நில்லுங்கள்’’ என்று உறுதிபடச்
சொல்லியிருக்கிறார்.
அதனாலே பாஜக, அதிமுக கூட்டணி வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம்.
இந்த ஜோசியர் போலவே விஜய் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும், ‘’பாஜகவுடன் கூட்டணிவைப்பது
தற்கொலைக்குச் சமம். ‘தமிழ்நாட்டுல இருக்கிற சிறுபான்மைச் சமூகத்தினர் கணிசமா நம்மகிட்ட
வந்துட்டாங்க. பெண்களும் இளைஞர்களும் நம்ம பக்கம்தான் இருக்காங்க. தி.மு.க-வைப் பிடிக்காத
வாக்காளர்களுக்கு, நாமதான் மாற்று சக்தியாக இருக்கோம். பா.ஜ.க கூட்டணிக்குள்ள போனோம்னா,
இதையெல்லாம் நாம இழந்துடுவோம். அதனால் நாம ஜெயிப்போம், அப்படியில்லைன்னாலும் இரண்டாவது
இடம் உறுதி’’ என்று கூறியிருக்கிறார்.
ஆக, விஜய்க்கு இந்த போதை தீரவே போவதில்லை.
